சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஜூன் 11ம் தேதியில் இருந்து விலை அதிகரிக்கத் தொடங்கி, ஜூன் 13ம் தேதி ஒரு சவரன் ரூ.74,360 என்ற வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.
அதற்கு மறுநாளும் விலை அதிகரித்து, மேலும் புதிய உச்சத்தை பதிவு செய்தது. நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.74120 ஆக விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.9,265 க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது. அதன்படி, சவரனுக்கு ரூ.440 குறைந்து, ஒரு சவரன் ரூ.73680 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.9,210 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.
இன்றைய விலை நிலவரப்படி கிராமுக்கு ரூ25 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ9235க்கும், ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.73880 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 120 க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி விலை ரூ120000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது