இதுதாங்க லவ்… சாலை விபத்தில் இறப்பின் விளிம்பிற்கு சென்ற காதலி…. அனைத்து சொத்துக்களையும் விற்று காப்பாற்றிய காதலன்….!!!
SeithiSolai Tamil June 21, 2025 10:48 PM

சீனாவில் லி என்ற பெண் வசித்து வருகிறார். இவரும் ஷென் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டில் திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு லி-க்கு விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த அவரது காதலன் அவருடன் இருந்து பத்திரமாக பாதுகாத்து வந்துள்ளார்.

3 மாதங்களுக்குப் பின் லி கண்விழித்த போதும், அவர் குளிப்பது, உண்பது போன்ற அடிப்படையான விஷயங்களை கூட மறந்துள்ளார். இதனால் தனது காதலியின் அருகே இருந்து அனைத்தையும் பார்த்து உள்ளார். காதலன் தனது சொத்துக்களை விற்று காதலிக்கு மருத்துவம் பார்த்தாலும் அது அனைத்தும் தீர்ந்து போக உறவினரிடம் கடன் வாங்கியுள்ளார்.

பின் இந்த செய்தி ஊடகங்களில் பரவ, பலரும் அவருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர். நர்சிங் ஹோம் ஒன்று அவர்களுக்கு தங்க இடம் கொடுத்து சென்னை மருத்துவ உதவியாளராக பணிபுரியுமாறு கூறியதையடுத்து தனது காதலியுடன் மற்ற முதியவர்களையும் பராமரித்து வந்துள்ளார். தற்போது அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு அதே நர்சிங் ஹோமில் வாழ்ந்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.