அது எப்படி திமிங்கலம்…!! ஓடும் லாரியில் இருந்து இறங்கி மீண்டும் டிரைவர் சீட்டுக்கு வந்த நபர்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!
SeithiSolai Tamil June 22, 2025 02:48 PM

சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு சிறிய காணொளி, பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த வீடியோவில், ஒரு லாரி ஓட்டுநர் நகரும் லாரியிலிருந்து கீழே இறங்கி, லாரியின் முன்பக்க கதவில் இருந்து மறுபடியும் ஏறி வந்து ஸ்டீயரிங் இடத்தை பிடிக்கும் அதிரடி ஸ்டண்ட் செய்யும் காட்சி பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ, சமூக வலைதளத்தில் @rareindianclips என்ற X கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. வீடியோவில் முதலில், ஒரு லாரி சம அளவிலான வேகத்தில் நகரும் காட்சி காட்டப்படுகிறது. அதனிலிருந்து ஓட்டுநர் இறங்கி, முன்பக்கத்தின் வேறு கதவிலிருந்து ஏறி சாமர்த்தியமாக குதித்து சென்று மீண்டும் ஓட்டுநர் இருக்கையில் அமர்கிறார். இது நிஜமாகவே நடந்தது போல தோன்றினாலும், வீடியோவை கவனமாக பார்த்த நெட்டிசன்களுக்கு உண்மை தெரிந்தது.

அதாவது, அந்த ஓட்டுநர் இருந்த லாரியின் முன்பாகவே இன்னொரு லாரி அதே வேகத்தில் செல்லும் காட்சியைக் கவனித்த நெட்டிசன்கள், “இது ரயில்வே வழியாக ரயிலில் ஏற்றப்பட்ட லாரி” என உறுதியாகக் கூறினர். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.