தமிழகத்தின் முத்தமிழ் செல்வி 7 கண்டங்களில் 7 உயரமான மலைகளில் ஏறி சாதனை... துணை முதல்வர் வாழ்த்து!
Dinamaalai June 23, 2025 01:48 AM


 
 ஏழு கண்டங்களில் உள்ள ஏழு உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்த முத்தமிழ்ச்செல்விக்கு துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்  "ஏழு கண்டங்களில் உள்ள ஏழு உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்திருக்கிறார் சகோதரி முத்தமிழ்ச் செல்வி. 

உயிரை பணையம் வைத்து இச்சாதனையை சாத்தியமாக்கி இருக்கும் அவருக்கு என் பாராட்டுகள். ஒவ்வொரு மலையேற்றத்திற்கு முன்பும் நம்மை சந்தித்து அவரது அடுத்தடுத்த மலையேற்றம் குறித்த தகவல்களையும் - அதில் உள்ள சவால்களையும் பகிர்ந்து கொள்வார். 

அவருடைய வெற்றிப்பயணத்திற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் துணை நின்று வருகிறது என்பதில் பெருமை கொள்கிறோம். தங்கை முத்தமிழ்ச்செல்வி இன்னும் பல உயரங்களை தொட - அவரைப்போல பலரை உருவாக்க என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.