Breaking: நடிகர் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டம்… பட்டாகத்தியுடன் தவெக நிர்வாகிகள் மோதல்.. 6 பேர் படுகாயம்… பரபரப்பு சம்பவம்…!!!
SeithiSolai Tamil June 23, 2025 05:48 PM

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். நடிகர் விஜயின் பிறந்த நாளை அந்த கட்சியின் தொண்டர்களும் ரசிகர்களும் வெகு விமர்சையாக பல்வேறு இடங்களில் கொண்டாடினார்கள். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கீழ் புதூர் பகுதியிலும் கட்சி நிர்வாகிகள் நடிகர் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது.

நகரச் செயலாளர் சசிகுமாருக்கும் கிளைச் தலைவர் நாகராஜுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் பட்டாக்கத்தியுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போட்டனர். இந்த சம்பவத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.