ஜனநாயகன் விஜய் அவர்களின் இறுதி படம் அல்ல… பிரபல நடிகை பகிர்ந்த தகவல்…
Tamil Minutes June 23, 2025 06:48 PM

தமிழ் சினிமாவில் முன்ணனி நடிகராக இருந்து வருபவர் விஜய். இவரது தந்தை S A சந்திரசேகர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் விஜய்.

தொடர்ந்து 1990களில் தனது 18 வது வயதில் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் விஜய். ஆரம்பத்தில் குடும்பக் கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். 2000 காலகட்டத்திற்கு பிறகு சமூக நீதி கருத்துக்கள் கொண்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகராக ஆனார் விஜய். 2010 காலகட்டத்திற்கு பிறகு விஜய் நடித்து வெளிவந்தாலே அந்த படம் ஹிட்டுதான் என்ற அளவுக்கு புகழின் உச்சிக்கு சென்றார் விஜய்.

தற்போது தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக இருந்த போதும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பிய விஜய் அரசியலில் இறங்கபோவதாக கூறி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அதன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தான் இறுதியாக கமிட்டான ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துவிட்டு முழுநேர அரசியல்வாதியாக மாறப்போவதாக கூறியிருக்கிறார்.

இந்நிலையில் ஜனநாயகன் திரைப்படம் தான் விஜயின் இறுதி படம் அதற்குப் பிறகு அரசியலில் முழு நேரமாக இறங்குவார் என்று கூறப்பட்டுள்ள நிலையில் அப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை மமிதா பைஜூ ஒரு புதிய தகவலை கூறியிருக்கிறார். அது என்னவென்றால், நான் விஜய் சார் உடன் ஷூட்டிங்கில் இருக்கும்போது அவரிடம் ஜனநாயகன் படம் தான் உங்களது இறுதி படமா அதற்குப் பிறகு நடிக்க மாட்டீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர் அடுத்த வருடம் தேர்தல் முடிவுகளை பொறுத்து தான் என்னுடைய முடிவு இருக்கும். நான் தொடர்ந்து நடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருக்கிறார் நமீதா பைஜூ. அதனால் விஜய் தொடர்ந்து நடிப்பார் என்று சினிமா வட்டாரங்களில் பேச்சு நிலவி வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.