தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்த நிலையில் கடந்த மாதம் ரிசல்ட் வெளிவந்தது. தற்போது மாணவ மாணவிகள் அனைவரும் கல்லூரிகளில் சேர்ந்து வரும் நிலையில், தேர்வில் தோல்வியடைந்த மாணவ மாணவர்களுக்கு துணைத்தேர்வு குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி அடுத்த மாதம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் வருகிற ஜூன் 25ஆம் தேதி முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தற்போது பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன்படி மாணவர்கள் ஹால் டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் விண்ணப்ப பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்தால் ஹால்டிக்கட்டை பதிவிறக்கம் செய்யலாம். மேலும் தேர்வு அட்டவணையையும் அதே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.