குட் நியூஸ்... தொப்பையைக் குறைக்கும் “வெகோவி” மருந்து இந்தியாவில் அறிமுகம்!
Dinamaalai June 27, 2025 02:48 PM

தொப்பையைக் குறைப்பது இப்போது ரொம்ப ஈஸி என்கிற குட் நியூஸ் வெளியாகி உள்ளது. ஆனால், பக்க விளைவுகள் குறித்து இன்னும் ஆதாரப்பூர்வமான செய்திகள் வெளியாகவில்லை.

குண்டாக அதிக பருமனுடன் இருப்பவர்களின் குறையை போக்கும் வகையில் இந்தியாவில் டேனிஷ் மருந்து நிறுவனமான நோவோ நோர்டிஸ்க் தயாரிப்பில் வெகோவி எனும் எடை இழப்பு மருந்து தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த மருந்தை வாரத்திற்கு ஒரு முறை ஊசி மூலம் எடுத்துக்கொள்ள வேண்டும்.  இந்த மருந்தின் ஆரம்ப விலை ₹17,345 லிருந்து  தொடங்குகின்றது, அதிகபட்சமாக ₹26,015 வரை இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த மருந்து, பி.எம்.ஐ (BMI) 30 க்கும் மேற்பட்டவர்களுக்கும், 27 க்கும் மேற்பட்ட பி.எம்.ஐ உடையவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. 0.25 mg முதல் 2.4 mg வரை உள்ள 5 அளவுகளில் இந்த மருந்து கிடைக்கின்றது. நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி இதனை பின்பற்றலாம் எனவும் மருத்துவரின் ஆலோசனை  இல்லாமல் இந்த மருந்தை எடுக்கக் கூடாது எனவும், இது நாள்பட்ட எடை மேலாண்மை மற்றும் முக்கியமான இருதய சம்பவங்களை  குறைப்பதற்கான ஒரு தீர்வாக இருக்க முடியும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  

இந்தியா போன்ற நாடுகளில் எடை குறைக்கும் மருந்துகளுக்கு அதிக தேவை இருந்த போதிலும், அதிக விலை காரணமாக இது பணக்காரர்களுக்கு மட்டும் தான் வாங்கி உபயோகிக்க முடியும் என சிலர் விமர்சனம் செய்துள்ளனர்.  இதை ஒப்பிடும் வகையில், அமெரிக்க நிறுவனமான எலி லில்லி தயாரித்த மோஞ்சாரோ  மருந்தின் மாத விலை ₹14,000 முதல் ₹17,500 வரை இருப்பதாக கூறப்படுகின்றது. இந்தியாவின் எடை குறைப்பு மருந்து சந்தை தற்போது ₹600 கோடி அளவில் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.