நம் உடல் ஆரோக்கியமே சரியான முறையில் நாம் தூங்குவதில் தான் அமைந்துள்ளது. சரியான முறையில் தூக்கம் அமையவில்லை என்றாலே அவை பல மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். அதனால், மனிதருக்கு தூக்கம் மிகவும் அவசியமானது. அதுவே தவறான நிலையில் தூங்கும்போது அது பல்வேறு உடல்நிலை பிரச்சினைகளை கொண்டுவந்துவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
பலர் தூங்கும் போது குப்புறபடுத்து தூங்குவர் . அதுதான் தங்களின் சுகமான தூக்க நிலை எனவும் கூறுவர். ஆனால் இதுவே பல உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குப்புறப்படுத்து தூங்குவதினால் முகத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடை செய்யப்பட்டு சருமம் விரைவில் சுருக்கம் அடைந்து வயதான தோற்றத்தை உண்டாக்கும் என கூறுகின்றனர்.
முதுகெலும்பு அருகில் இருக்கும் ரத்த குழாய்கள் இறுக்கமாக ஆரம்பித்து விடும்.அதுமட்டுமின்றி மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து ஆக்சிஜன் சப்ளை தடை செய்யப்படுகிறது. கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இது போல் தூங்குவதால் ரத்தக்குழாய்களில் அடைப்பு கூட ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதே குப்புறப்படுக்கும் போது மார்பு பகுதி இறுகி உடலுக்கு சரியான ஆக்சிசன் கிடைக்காது. இவ்வாறு தொடர்ந்து செய்தால் நெஞ்சு வலி கூட ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். மேலும், வயிற்றுப் பகுதியில் அதிகமாக அழுத்தம் கொடுப்பதால் செரிமான கோளாறு, அல்சர், வாயு தொந்தரவுகளும் ஏற்படலாம் என்கின்றனர். தொடர்ந்து இவ்வாறே படுக்கும் போது கழுத்து மற்றும் தோள்பட்டை வலியும் ஏற்படும். தண்டுவட பாதிப்பு ஏற்பட்டு எலும்பு அடர்த்தி குறைய தொடங்கும்.குறிப்பாக இதய பிரச்சனை இருப்பவர்கள் கண்டிப்பாக இந்த நிலையில் தூங்கவே கூடாது என்கின்றனர் மருத்துவர்கள்.
நேராகவோ அல்லது இடது புறமாகவோ படுத்து தூங்குவதே சரியான தூக்க முறை . குறட்டை விடும் பிரச்சனை உள்ளவர்கள் நேராக படுக்காமல் ஒரு புறமாக சாய்ந்து படுக்கவேண்டும். கர்ப்பிணிகள் எப்போதும் இடது புறமாக படுத்து உறங்குவதே குழந்தையின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் . முதுகு வலி. கை கால் வலி இருப்பவர்கள் 15 நிமிடங்கள் மட்டும் குப்புறப்படுத்து உறங்கலாம். இப்படி செய்வதால் முதுகு வலி குறையும் ஆனாலும் இந்த நிலையிலேயே தொடர்ந்து தூங்குவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது