அடச்சீ..! “72 வயசில் செய்ற வேலையா இது”..? பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறல்… கைத்தடுமாறி தள்ளாடியபடியே… வைரலாகும் வீடியோ..!!
SeithiSolai Tamil July 01, 2025 02:48 PM

உத்தரப்பிரதேச மாநிலம் முஜஃபர்நகர் நகரில் பரபரப்பான சந்தை பகுதியில் நடந்த ஒரு நேரடி பாலியல் தொல்லை சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகிறது. 72 வயதான முதியவர் ஒருவர், ரோட்டில் நடந்து செல்வது போல, வழியில் இருந்த ஒரு பெண்மணியை தவறாக தொட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி மக்கள் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம், களாபர் கோத்வாலி போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய நகர பகுதியில், ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.40 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது. சந்தைக்கு வேலைக்காக வந்திருந்த பெண் ஒருவரை, ரியாஸ் அஹமத் என அடையாளம் காணப்பட்ட 72 வயதான முதியவர் நடந்து செல்லும் போது பின்னால் வந்து தவறாக தொடுகிறார். இதைக் கண்டு பதற்றமடைந்த அந்தப் பெண், உடனடியாக அவரை எதிர்த்து சாடுகிறார். அதற்கிடையில் அந்த மூதாட்டி தப்பிச் செல்ல முயற்சிக்கிறார்.

 

இந்த சம்பவம் முழுவதும் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது அது சமூக வலைதளங்களில் பரவுகிறது. அந்த வீடியோவை அனுராக் கவுதம் என்ற நபர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் குற்றவாளியான ரியாஸ் அஹமத், மசூதியிலிருந்து வெளியே வந்த பிறகு இந்த செயலில் ஈடுபட்டதாக அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், முஜஃபர்நகர் போலீசார் உடனடியாக ரியாஸ் அஹமத் என்பவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பிறகு அவர் தடுமாறி நடக்கும் வீடியோவும் வெளியானது. தற்போது போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு, சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.