ராஜஸ்தான் மாநிலத்தின் சர்வே எல்லையில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் சடலம் கிடந்துள்ளது. அந்த வழியாக சென்ற ஆடு மற்றும் மாடு மேய்க்கும் நபர்கள் இருவரின் சடலங்களையும் பார்த்து பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி பாதுகாப்பு படை வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.
அப்போது இறந்த நிலையில் கிடந்தது ரவிக்குமார் என்ற 17 வயது சிறுவன் மற்றும் சாந்தி பாய் என்ற 15 வயது சிறுமியும் என்பது தெரியவந்தது. இவர்கள் பாகிஸ்தான் நாட்டின் செல்போன் சிம் கார்டு வைத்துள்ளதால் அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களின் உடல் கிடந்த இடத்தில் ஒரு வாட்டர் பாட்டில் கிடந்ததால் அவர்கள் தண்ணீர் இல்லாமல் நாக்கு வறண்டு நீர்ச்சத்து குறைந்து உயிரிழந்திருக்கலாம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த பெண்ணின் கையில் சிகப்பு மற்றும் வெள்ளை வெளியில் இருக்கும் நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் பெற்றோர் எதிர்ப்பை மீறி இந்தியாவுக்கு வர முயன்ற நிலையில் விசாவுக்கு விண்ணப்பித்தனர்.
ஆனால் இந்தியா பாகிஸ்தான் பிரச்சனை காரணமாக அவர்களுக்கு விசா கிடைக்கவில்லை. இதன் காரணமாக சட்டவிரோதமாக அவர்கள் இந்தியாவிற்கு நுழைந்து ராஜஸ்தான் வந்தபோது பாலைவனத்தில் தண்ணீர் இல்லாமல் உயிரிழந்தனர்.
மேலும் இவர்களின் சடலங்களை கைப்பற்றிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.