உத்தரப்பிரதேச மாநிலம் ஹஸ்ரத்பூர் நகரில், ஒரு பெண் பொதுமக்கள் முன்னிலையில் ஆட்டோ ஓட்டுநரை அறைந்தும், செருப்பால் அடித்து தாக்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீனா என்ற பெண் தனது வீட்டிலிருந்து சந்தைக்குச் செல்லும் வழியில் சென்றபோது, அவரது சேலை அருகே சென்ற ஒரு ஆட்டோவில் சிக்கிக் கொண்டது. அதனால், அவர் கீழே விழும் நிலைக்கு சென்றதாகவும், அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் கோபமடைந்த அவர், ஆட்டோவை நிறுத்தச் சொல்லி, ஓட்டுநரை இழுத்து கீழே இறக்கி, அறைந்துள்ளார். பின்னர் தனது செருப்பால் அடித்ததாகக் கூறப்படுகிறது.
தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் ‘தேவேந்திரா’ என அடையாளம் காணப்பட்டுள்ளார். வீடியோவில், அந்தப் பெண் அவரது ஆடைகளை கிழிக்கும் அளவுக்கு தாக்குவதை காணலாம். இதைச் சுற்றி நின்ற பொதுமக்கள் யாரும் தலையிடாதது, தகவல் பரவியதும் சமூகத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், ஹஸ்ரத்பூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?