உடனே விண்ணப்பிக்கவும்.. அரசு வங்கிகளில் 5208 காலியிடங்கள்..!
Newstm Tamil July 02, 2025 10:48 AM

கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு அரசு வங்கிகளில் காலியாக உள்ள 5208 Probationary Officer/Management Trainee (PO/MT) காலிப்பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 21.07.2025 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள் விவரம்

IBPS வங்கி பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • Probationary Officer/Management Trainee – 5208 காலியிடங்கள்

வங்கி வாரியான காலியிடங்கள் எண்ணிக்கை:

வங்கியின் பெயர் காலியிடங்கள்
பேங்க் ஆஃப் பரோடா 1000 பணியிடங்கள்
பேங்க் ஆஃப் இந்தியா 700 பணியிடங்கள்
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா 1000 பணியிடங்கள்
கனரா வங்கி 1000 பணியிடங்கள்
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 500 பணியிடங்கள்
இந்தியன் வங்கி அறிவிக்கப்படவில்லை
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 450 பணியிடங்கள்
பஞ்சாப் நேஷனல் வங்கி 200 பணியிடங்கள்
பஞ்சாப் & சிந்து வங்கி 358 பணியிடங்கள்
யூகோ வங்கி அறிவிக்கப்படவில்லை
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா அறிவிக்கப்படவில்லை
கல்வித் தகுதி

வங்கி பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் Any Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

குறிப்பு: இறுதியாண்டு/செமஸ்டரில் உள்ள விண்ணப்பதாரர்கள் 21.07.2025 க்குள் பட்டப்படிப்பு சான்றினை சமர்ப்பித்தால், விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு 

வங்கி பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சம் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

வயது வரம்பின் தளர்வு தளர்வு (ஆண்டுகள்)
SC/ST விண்ணப்பதாரர்கள் 5 ஆண்டுகள்
OBC விண்ணப்பதாரர்கள் 3 ஆண்டுகள்
PwBD (Gen/EWS) விண்ணப்பதாரர்கள் 10 ஆண்டுகள்
PwBD (SC/ST) விண்ணப்பதாரர்கள் 15 ஆண்டுகள்
PwBD (OBC) விண்ணப்பதாரர்கள் 13 ஆண்டுகள்
முன்னாள் இராணுவத்தினர் (Ex-Servicemen) 5 ஆண்டுகள்
சம்பள விவரங்கள்

வங்கி பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்குத் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப அடிப்படை ஊதியமாக மாதத்திற்கு ரூ. 48,480/- முதல் ரூ. 85,920/- வரை வழங்கப்படும். இது குறித்த மேலும் விரிவான தகவல்களை அறிய கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

தேர்வு செயல்முறை

வங்கி பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2025 பணியிடங்களுக்கான 2025 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்புக்கான தேர்வு செயல்முறை பின்வருமாறு அமையும்:

  • Preliminary Examination (முதற்கட்ட தேர்வு)
  • Main Examination (முதன்மை தேர்வு)
  • Interview (நேர்காணல்)
தேர்வு மையங்கள்

முதன்மைத் தேர்வு (Preliminary Exam): சென்னை, கோயம்புத்தூர், கடலூர், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில்/கன்னியாகுமரி, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், நாமக்கல், தூத்துக்குடி, திருப்பூர், விழுப்புரம், தர்மபுரி மற்றும் திண்டுக்கல் ஆகிய நகரங்களில் அமைந்துள்ளன.

முதன்மை எழுத்துத் தேர்வு (Mains Exam): சென்னை, கோயம்புத்தூர், மதுரை, நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய நகரங்களில் அமைந்துள்ளன.

விண்ணப்பக் கட்டணம்
  • ST/SC/Ex-s/PWD விண்ணப்பதாரர்களுக்கு : ரூ. 175/-
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 850/-
  • கட்டண முறை: ஆன்லைன்
எப்படி விண்ணப்பிப்பது?

வங்கி பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 01.07.2025 முதல் 21.07.2025 தேதிக்குள் https://www.ibps.in/ இணையதளத்தில் சென்று “Click Here for New Registration” பட்டனை கிளிக் செய்து “Register” செய்து, பிறகு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.