என்னை கடுமையாக தாக்கி தர தரவென இழுத்து… கடத்த கூட முயற்சி செய்தார்கள்… உயர் அதிகாரியின் பரபரப்பு வாக்குமூலம்..!!!
SeithiSolai Tamil July 02, 2025 11:48 PM

ஒடிசாவில் புவனேஸ்வரர் மாநகராட்சியின் கூடுதல் ஆணையாளராக ரத்னாகர் சாஹூ இருக்கிறார். இவர் வேலையில் இருந்த போது சிலர் மர்ம நபர்கள் அவரை அடித்து தாக்கி அலுவலகத்தில் இருந்து வெளியே இழுத்து போட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்த தாக்குதல் பாஜக பிரமுகரின் முன்னிலையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அந்த பிரமுகருக்கு கட்சி எம்எல்ஏ உடன் தொடர்பு உள்ளது. அந்த அரசு அதிகாரி பட்டப் பகலில் மக்களின் குறைகளை கேட்டுக்கொண்டிருந்தபோது இந்த துயர சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிசிபி பிரகாஷ் சந்திரா கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட சாஹூ இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, நேற்று மக்களின் குறைகளை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது ஜீவன் என்ற நபருடன் ஆறு பேர் வந்தனர். அவர்கள் என்னிடம் ஜக்கா பாயிடம் தவறாக நடந்து கொண்டீரா? என்று கேட்டார். அதற்கு இல்லை என்று கூறினேன். ஆனால் திடீரென அவர்கள் கொடூரமாக என்னை தாக்கினர்.

என்னை தர தரவென வெளியே இழுத்துச் சென்றனர். கடத்தவும் முயன்றனர். வாகனம் ஒன்றில் அழைத்து சென்றனர். நேயர் என்னை காப்பாற்ற வந்தார். இந்த வழக்கில் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட நரைமுறையின் மீது தனக்கு நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.