தெலங்கானா மாநில அரசு தினசரி தொழிலாளர்களுக்கான வேலை நேரத்தை 10 மணி நேரமாக அதிகரித்துள்ளது. இது குறித்து இன்று ஜூலை 5ம் தேதி சனிக்கிழமை பிறப்பித்துள்ள உத்தரவில் வணிக நிறுவனங்களில் கடைகள் தவிர்த்து தொழிலாளர்களின் வேலை நேரம் நாளொன்றுக்கு 8 மணி நேரத்திலிருந்து 10 மணி நேரம் ஆக அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், வாராந்திர வேலை நேரம் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட படி 48 மணி நேரத்திற்கு மிகாமல் என்ற அளவிலேயே தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா அரசின் 'தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்சாலைகள் துறையின்' முதன்மைச் செயலர் இன்று இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அதில், குறைந்தபட்சம் 6 மணி நேர வேலை நேரத்துக்கிடையில் 30 நிமிட இடைவெளி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, எக்காரணம் கொண்டும் எந்தவொரு தொழிலாளரும் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்தை கடந்து பணிபுரியக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?