மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்தனர். இந்நிலையில், பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்ற அறிவிப்பை பாஜக அரசு வாபஸ் பெற்றுள்ளது. மும்மொழி கொள்கையை பாஜக வாபஸ் பெற்ற நிலையில், போராட்டம் வெற்றி கொண்டாட்டமாக மாறியுள்ளது.
மும்பையில் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே சகோதரர்கள், பிரம்மாண்ட வெற்றி கொண்டாட்டத்தை நடத்தினர். இந்தக் கூட்டம் வோர்லியில் உள்ள NSCI டோமில் நடைபெற்றது. இந்த இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி கூட்டத்தில், 20 ஆண்டுகளாக எதிர் எதிர் துருவங்களாக இருந்த உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே ஒரே மேடையில் கலந்து கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்நிலையில், இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி கூட்டத்தில் பேசிய எம்.என்.எஸ் தலைவர் ராஜ் தாக்கரே, ” மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம். இந்தி பேசாத மாநிலங்கள் மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளபோது இந்திக்கு இங்கு என்ன தேவை உள்ளது? மகாராஷ்டிராவில் மராட்டியத்திற்கு மட்டுமே முக்கியத்துவம்; ஆனால் பாஜக இந்தியை திணிக்கிறது. இந்தி பேசாத மாநிலங்கள் மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளன. 3ம் மொழிக்கு இந்தியாவில் என்ன தேவை உள்ளது? வெறும் 200 ஆண்டுகால வரலாறு கொண்ட மொழி இந்தி.
மராட்டியத்தில் இருந்து மும்பையைப் பிரிக்க சதி நடக்கிறது. இந்தியா முழுவதும் மராட்டிய பேரரசர்கள் ஆட்சி செய்தபோது மராத்தியை திணிக்கவில்லை” எனக் கூறியுள்ளார். நீங்கள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று முழக்கமிடுவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றால், மராத்தியில் உங்களுக்கு ஏன் பிரச்சனை?” என்று பாஜகவிடம் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்துத்துவா என்பது ஏகபோக உரிமை அல்ல. நாங்கள் மிகவும் வேரூன்றிய இந்துக்கள். நீங்கள் எங்களுக்கு இந்து மதத்தைக் கற்பிக்கத் தேவையில்லை. 1992 ல் மும்பையில் நடந்த கலவரத்தில் இந்துக்களை காப்பாற்றியது மராத்தி மக்கள்தான்” என உத்தவ் தாக்கரே பாஜகவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?