யூடியூப் பார்த்து ஏடிஎம்மில் பணத்தை திருடிய 2 வாலிபர்கள்….. சிசிடிவி மூலம் தெரிய வந்த உண்மை….வீடியோ வெளியாகி பரபரப்பு ….!!
SeithiSolai Tamil July 02, 2025 11:48 PM

கோட்டா, ஜஹவர் நகர் பகுதியில் அமைந்துள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் 2 வாலிபர்கள் தந்திரமாக பணம் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் ஏடிஎம்மில் பணம் திருடுவதற்காகவே கோட்டாவிற்கு வந்துள்ளனர். அவர்கள் கடந்த ஜூன் 29 அன்று யூடியூப் மூலம் தான் கற்றுக்கொண்ட தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணம் வெளியே வராமல் இருக்க டேப்பால் ஒட்டியுள்ளனர்.

அப்போது வாடிக்கையாளர் ஒருவர் ரூ.20000 பணம் எடுப்பதற்காக ஏடிஎம்மிற்குள் சென்றார். ஆனால் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்த நிலையில், ஏடிஎம்மில் இருந்து பணம் வெளிவரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் உடனடியாக வங்கி அதிகாரிகளிடம் கூறினார். இதை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது வாலிபர்கள் செய்த செயல் தெரிய வந்தது.

பின்னர் மாலை நேரத்தில் ஏடிஎம் அருகே வந்த 2 வாலிபர்களையும் கையும் களவுமாக பிடித்த அவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் திருட்டில் ஈடுபட்ட வாலிபர்கள் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த அபிஷேக் வர்மா மற்றும் அவரது கூட்டாளி என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக காவல்துறையினர் யூடியூப்பில் உள்ள வீடியோக்களை பார்த்து மோசடி முறைகளை கற்றுக் கொள்கிறார்கள், என்பதை உணர்ந்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஏடிஎம் பரிவர்த்தனைகள் குறித்து ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக வங்கியிலோ அல்லது காவல் நிலையத்திலோ புகார் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.