ஆந்திர மாநிலத்தில் 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதி அபுபக்கர் சித்திக் தமிழ்நாடு காவல்துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 1995 முதல் பல்வேறு வெடிகுண்டு சம்பவங்கள் மற்றும் மத ரீதியான கொலைகளில் தொடர்புடையவர். இவர், 2011ல் மதுரை-திருமங்கலம் வழியாக முன்னாள் பிரதமர் எல்.கே. அத்வானியின் ரத யாத்திரையின் போது பைப் வெடிகுண்டு வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டவர்.
இவருடன் திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்த மற்றொரு தீவிரவாதி முகமது அலியும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் 1995ல் சென்னை சிந்தாதிரிப்பேட்டை இந்து முன்னணி அலுவலக வெடிகுண்டு வெடிப்பு, நாகூர் தங்கம் முத்துக்கிருஷ்ணன் வீட்டில் பார்சல் குண்டு வெடிப்பு, 1999ல் சென்னை, திருச்சி, கோவை, கேரளா உட்பட 7 இடங்களில் குண்டு வைத்த வழக்கு, 2012ல் வேலூர் மருத்துவர் அரவிந்த்ரெட்டி கொலை, மற்றும் 2013ல் பெங்களூர் பாஜக அலுவலக வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள்.
தமிழ்நாடு காவல்துறையின் தனிப்படை, பல மாதங்களாக இவர்களைத் தேடி வந்த நிலையில், பெங்களூரில் இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து ஆந்திராவில் பொறிவைத்து கைது செய்தது. கைது செய்யப்பட்ட இருவரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தக் கைது, 1990களில் தென்னிந்தியாவை உலுக்கிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?