“அதிகாலை நேரம்”… தேசிய நெடுஞ்சாலையில் காருக்குள் வைத்து 17 வயது சிறுமி பலாத்காரம்… மர்ம நபர்கள் வெறிச்செயல்… பரபரப்பு சம்பவம்…!!!!
SeithiSolai Tamil July 02, 2025 10:48 AM

மகராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது சம்பவ நாளில் அதிகாலை 4 மணியளவில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு சிறுமி காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஓட்டுநர் நெடுஞ்சாலையின் அருகே காரை நிறுத்தினார். ஓட்டுனர் காரில் இருந்து இறங்கியதும் திடீரென அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இரண்டு பேர் அங்கு வந்தனர். அவர்கள் ஆயுதங்களை வைத்து மிரட்டி காருக்குள் இருந்த பெண்களிடம் இருந்து தங்க நகைகளை பறித்த நிலையில் அந்த திருடர்களில் ஒருவன் காரில் இருந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தான்.

பின்னர் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.