வைரலாகும் அதிர்ச்சி வீடியோ... நடு ரோட்டில் சென்ற பேருந்து முன் துப்பாக்கியை சுழற்றி காரை நிறுத்திய நபர்..!
Dinamaalai July 02, 2025 03:48 AM

சோனிபட் மாவட்டத்தில் சோனிபட்-கோஹானா சாலையில்  பரபரப்பான சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை, ரத்தன்கர் அருகே, ஒரு ஃபார்ச்சூனர் காரை ஓட்டிச் சென்றனர்.  திடீரென தனது காரை ஒரு பேருந்தின் முன்னால் நிறுத்திவிட்டார்.  தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்துச் சுழற்றியதோடு, பேருந்து ஓட்டுநரையும் பயணிகளையும் மிரட்டல் விடுக்கப்பட்ட  சம்பவம்  பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.  
இச்சம்பவம் அந்த வழியாக சென்ற ஜிந்த் டிப்போவின் பேருந்தில் ஏற்பட்டது. பேருந்து டெல்லிக்குச் செல்லும் வழியில் பயணிகளை ஏற்றி சென்றுகொண்டிருந்தது.  அந்த ஃபார்ச்சூனர் ஓட்டுநர் தனது வாகனத்தை திடீரென பேருந்தின் முன்னால் நிறுத்திவிட்டதோடு  துப்பாக்கியை எடுத்துக்காட்டி, ஓட்டுநரிடம் கோபமாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார்.  


பயணிகள் இந்த சம்பவத்தைக் காணும்  வகையில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட நபர் துப்பாக்கியை சுழற்றி அச்சுறுத்தும் காட்சிகள்  வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து  CIA-1 பிரிவினருடன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணிகளிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் சிசிடிவி காட்சிகளை அலசி, முகமது சஞ்சய் கான் என்ற டெல்லியைச் சேர்ந்த நபரை அடையாளம் கண்டுபிடித்து கைது செய்தனர்.  இந்திய குற்றச் சட்டத்தின் புதிய பிரிவு BNS 110ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  இச்சம்பவம், பொதுமக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. “சாலையில் பயணிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய பொறுப்பு அரசுக்கும் காவல்துறைக்கும் உள்ளது” என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.  தற்போது இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.