இந்தியாவில் பிரபல தொலைதொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா நிறுவனங்களின் ரீசார்ஜ் கட்டணம் உயர்த்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் ஏர்டெல் உள்ளது. மூன்றாவது இடத்தில் வோடஃபோன் ஐடியா நிறுவனம் உள்ளது. இந்நிலையில், 3 நிறுவனங்களுமே கடந்த ஆண்டு அடுத்தடுத்து ரீசார்ஜ் கட்டண உயர்வை அமல்படுத்தின. ஜியோ நிறுவனத்தில் மலிவு விலையில் இருந்த பிளான்கள் முதல் அனைத்து ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணமும் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் அடுத்த சில மாதங்களில் 10 முதல் 20% வரை கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டு உயர்த்த வாய்ப்புள்ளது என்றும், இது ஆறு ஆண்டுகளில் நான்காவது பெரிய கட்டண உயர்வாக இருக்கக்கூடும் என்றும் பெர்ன்ஸ்டீன் நிறுவன ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.தொழில்துறை முழுவதும் நடந்து வரும் கட்டண மாற்ற முயற்சிகளுக்கு ஏற்ப, நவம்பர்/ டிசம்பர் 2025 இல் கட்டண உயர்வு இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த நடவடிக்கை தொலைத்தொடர்புத் துறைக்கான வருவாய் தெரிவுநிலையை மேம்படுத்தக்கூடும் என்று பெர்ன்ஸ்டீனின் ஆய்வாளர்கள் ஒரு ஆய்வு அறிக்கையில் தெரிவித்து உள்ளனர்.
பார்தி ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா ஆகிய மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் நகர்ப்புற 5G கவரேஜை முழுமையாக்க உள்ள நிலையில், ஆபரேட்டர்கள் மற்றும் வருவாய் விகிதத்தின் முன்னேற்றத்திற்கு கவனம் செலுத்தி வருகின்றனர். அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் 5G உள்கட்டமைப்பை விரிவுபடுத்தும் செலவுகளை ஈடுகட்ட கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. 5G நெட்வொர்க் அனைவருக்கும் கிடைக்கும்போது நுகர்வோர் தேவை அதிகரித்து,தொழில் படிப்படியாக வளர்ந்து வருமானத்தையும் காண வேண்டும். அதற்கேற்ப கட்டண விகிதங்கள் மாற்றப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.