காரைக்காலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மகிளா காங்கிரஸ் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகிளா காங்கிரஸ் தலைவர் நிர்மலா தலைமை தாங்கினார். அதோடு மாநில தலைவர் வைத்தியலிங்கம் எம்.பி, வைத்தியநாதன் எம் எல் ஏ, முன்னாள் மாநில தலைவர் ஏ வி சுப்ரமணியன், மாவட்ட தலைவர் சந்திரமோகன், மாநில தலைவி நிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டார். அவர் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது என்.ஆர் காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி கட்சி ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் முடிந்து விட்டது. ஆனால் 2 கட்சிகளும் தேர்தலின் போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று கூட நிறைவேற்ற வில்லை.
இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கேட்கும்போது படிப்படியாக நிறைவேற்றி வருவதாக கூறுகிறார்கள். முதலமைச்சர் ரங்கசாமி படிப்படியாக நிறைவேற்றி வருவது ரெஸ்டோ பார்களை தான். ஒரு ரெஸ்ரோ பாரை திறப்பதற்கு நான் ரூ. 40 லட்சம் லஞ்சம் வாங்குகின்றனர்.
காலையில் விண்ணப்பித்தால் மாலையில் பாரை திறப்பதற்கு அனுமதி கிடைத்து விடும். மக்களை மது மயக்கத்திலேயே வைத்துள்ளார்கள். அப்போது தான் கேள்வி கேட்க மாட்டார்கள் என்று நினைக்கிறார்கள் என்று கூறினார்.