இப்படி ஒரு கொடூரம் யாருக்கும் நடக்க கூடாது - பள்ளி விடுதியில் 2 ஆண்டுகளாக சிறுமி பலாத்காரம்..!
Newstm Tamil July 03, 2025 11:48 AM

பாட்னாவில் பார்வையற்றவர்களுக்கான பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 2018-ம் ஆண்டு ஒரு சிறுமி விடுதியில் சேர்ந்து படித்து வந்திருக்கிறாள். பள்ளியில் கடந்த மே மாதம் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுதியில் இருந்தவர்கள் எல்லோரும் வீட்டுக்கு சென்று விட்டனர்.

கடந்த ஜூன் 25-ந்தேதி பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. 12 வயதுடைய அந்த சிறுமியை பெற்றோர் மகிழ்ச்சியாக பள்ளிக்கு திருப்பி அனுப்பியுள்ளனர். ஆனால், அந்த சிறுமி பள்ளிக்கு போகாமல் அடம் பிடித்துள்ளார். பயந்து போய் காணப்பட்டார்.

அப்போது, அந்த சிறுமியின் சகோதரி பெற்றோரிடம் அதிர்ச்சி அளிக்கும் தகவலை கூறியுள்ளாள். அதன்பின்னரே சிறுமி பள்ளிக்கு போகாமல் மறுத்ததற்கான காரணம் தெரிய வந்தது. இல்லையெனில் அதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சிறுமியிடம் அஜித் சார் மிக தவறாக நடந்து கொண்டார் என கூறியிருக்கிறாள். கடந்த 2 ஆண்டுகளாக சிறுமியை அஜித் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார் என்ற தகவலையும் சிறுமியின் சகோதரி கூறி பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறாள்.

உடனடியாக இதுபற்றி ஆகம்குவான் காவல் நிலையத்திற்கு சென்று பெற்றோர் புகார் அளித்தனர். அந்த பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பார்வை தெரியாத நிலையில், யாரையும் தெளிவாக பார்க்க முடியாது.

இந்த வழக்கில் குற்றவாளியின் குரலை சிறுமி சரியாக அறிந்து வைத்திருக்கிறாள். பள்ளியில் கிளார்க்காக பணிபுரிந்து வரும் ஊழியர் அஜித் குமார் பார்வையற்றவர்கள் படிக்கும் அந்த பள்ளியில் வேலைக்காக சேர்ந்துள்ளார். அவர் மாணவிகளுக்கு வினாத்தாள்களையும் வழங்கி வந்திருக்கிறார்.

அப்போது, இந்த சிறுமியையும் பார்த்திருக்கிறார். அப்போதிருந்து சிறுமி மீது தவறான நோக்குடன் இருந்து வந்துள்ளார். அந்த சிறுமி பெற்றோரிடம் கூறும்போது, பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட பின்னர், அடித்து தாக்கி விடுவேன் என்றும் பள்ளியை விட்டு வெளியேற்றி விடுவேன் என்றும் அஜித் மிரட்டி வந்துள்ளார் என கூறினார்.

இதனால், பயத்தில் இருந்த அந்த சிறுமி யாரிடமும் இதுபற்றி எதுவும் கூறாமல் இருந்திருக்கிறாள். சிறுமியின் பெற்றோருடன் போலீசார் பள்ளிக்கு சென்றபோது, அஜித் சார் சிறைக்கு செல்வார், சரியா? என அவர்களிடம் மாணவிகள் கேட்டுள்ளனர். இதில் இருந்து அஜித் மீது மற்ற மாணவிகளுக்கும் எந்தளவுக்கு பயம் உள்ளது என தெரிய வருகிறது என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.