தெலுங்கானா தொழிற்சாலை வெடிவிபத்து... பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு!
Dinamaalai July 03, 2025 02:48 PM

தெலுங்கானா தொழிற்சாலை வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், வெடி விபத்தில் உயரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி கருணைத்தொகை வழங்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் பாஷமிலராம் தொழிற்பேட்டையில் மருந்து தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் கடந்த 30-ந்தேதி ரசாயன கலவை எந்திரம் திடீரென வெடித்து சிதறியதில் தொழிற்சாலையில் உள்ள கட்டிடமும் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கை 38 ஆக இருந்தது.

தற்போது இந்த தனியார் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "தொழிற்சாலையில் நடந்த விபத்து குறித்த விவரங்களை நாங்கள் மிகுந்த வேதனையுடன் பகிர்ந்து கொள்கிறோம். தீ விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர். 33 பேர் காயம் அடைந்தனர். உயரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ₹1 கோடி கருணைத்தொகை வழங்கப்படும். அதே நேரத்தில் காயமடைந்தவர்களுக்கு முழு மருத்துவ மற்றும் மறுவாழ்வு உதவியும் கிடைக்கும். ஆலை செயல்பாடுகள் சுமார் 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்" என்று தெரிவித்தது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.