டாபர் நிறுவனத்தின் உற்பத்தி 50 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. அதற்கு எதிராகத்தான் பதஞ்சலி நிறுவனம் ஒரு விளம்பரத்தை வெளியிட்டு வந்தது. அதில் குறிப்பாக பதஞ்சலியின் தயாரிப்பு தரம் கூடியது. அதில் 50-க்கும் மேற்பட்ட ஆயுர்வேத மருந்துகள் சேர்க்கப்படுகிறது. ஆனால் டாபர் நிறுவன தயாரிப்பில் 47 ஆயுர்வேத மருந்துகள் மட்டும்தான் சேர்க்கப்படுகிறது என்ற விளம்பரம் வெளியானது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாபர் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டாபர் நிறுவனத்தின் ஊழியர்கள் தங்களது தயாரிப்புகளை குறித்து அவதூறு பரப்பும் வகையில் பதஞ்சலி நிறுவனம் விளம்பரத்தை வெளியிட்டு வருகிறது என்று குற்றம் சாட்டியது. இதையடுத்து டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து குறித்து அவதூறு பரப்பும் வகையில் பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட விளம்பரத்தை உடனடியாக நிறுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.