இந்திய ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே செயலியில் பெறும் வகையில் 'ரயில்ஒன்' என்ற செயலியை ரயில்வே அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் கோடிக்கணக்கான பயணிகள் தினமும் ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது, ரயில் சேவைகளை பெற வெவ்வேறு செல்போன் செயலிகள் இருக்கின்றன. எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் மற்றும் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய 'ரயில் கனெக்ட்' என்ற செயலி உள்ளது.
புறநகர் ரயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட் பெற 'யு.டி.எஸ்.' செயலி உள்ளது. இதுதவிர, தனியார் துறை செயலிகளும் இயங்கி வருகின்றன. இதற்கிடையே, இந்திய ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே செயலியில் பெறும் வகையில் 'ரயில்ஒன்' என்ற செல்போன் செயலியை ரயில்வே அமைச்சகம் உருவாக்கி வந்தது. இந்த செயலியை ரயில்வே அமைச்சர் அறிமுகம் செய்துவைத்தார்.
இந்த ரயில் ஒன் செயலியில், முன்பதிவு ரயில் டிக்கெட், முன்பதிவில்லா டிக்கெட், நடைமேடை டிக்கெட், ரயில்கள் மற்றும் பி.என்.ஆர். எண் குறித்த விசாரணை, பயண திட்டமிடல், ரயில் உதவி சேவைகள், ரயிலில் உணவு முன்பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் பெறலாம். இதனால் ரயில்வே சேவைகளுக்கு இனி இனி தனித்தனி செயலி பதிவிறக்கம் செய்து வைத்து இருக்க தேவையில்லை என்பதால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது