“கடைசி நேரத்தில் வேலை கொடுத்த மேலாளர்….” பழிவாங்க ஊழியர் செய்த காரியம்….!! கடைசியில் அவரிடமே சென்று புலம்பி…. சுவாரஸ்ய சம்பவம்….!!
SeithiSolai Tamil July 03, 2025 02:48 PM

கார்ப்பரேட் உலகத்தில் மேலாளர் சிக்கல்கள் என்பது பெரும்பாலான ஊழியர்களுக்கு காணப்படும் இயல்பான பிரச்சனை. இந்நிலையில், ஒரு ரெடிட் பயனர் தனது முதலாளியின் மீது கோபத்தை வெளிப்படுத்துவதற்காக வித்தியாசமான யுக்தியை கையாண்டுள்ளார். தனது சிந்தனையால் அவர் தற்போது சமூக வலைதளங்களில் பாராட்டுகளையும் சிரிப்பையும் பெற்றுவருகிறார்.

r/Delhi பகுதியில், @No_Competition_4809 என்ற ரெடிட் பயனர் “சிறந்த பழிவாங்கல் அமைதியாக எடுக்கப்படுகிறது” என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார். அதில், 6 மாதங்களுக்கு முன்பு ஒரு நிறுவனத்தில் சேர்ந்ததாகவும், அந்த நிறுவனத்தின் மேலாளர் சோம்பேறி, ஆனால் அதிகாரம் பிடித்தவர் என்றும் கூறுகிறார்.

அந்த மேலாளர், வேலை இருந்தாலும், இல்லாவிட்டாலும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை அலுவலகத்தில் இருக்க கட்டாயமாக்கியதால், பயனர் தூக்கமின்றி கடுமையாக பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, ஊழியர் தன் உடல்நலத்தை பாதுகாக்க இரவு 7 மணிக்குள் அலுவலகத்திலிருந்து வெளியேற ஆரம்பித்தார். ஆனால் அதற்கு எதிராக மேலாளர், முக்கியமில்லாத பணிகளை இறுதி நேரத்தில் வழங்கி, அவற்றை அன்றைக்கே முடிக்க வற்புறுத்தினார்.

இதனால் சலிப்படைந்த அந்த ஊழியர், தனது முதலாளியின் தொலைபேசி எண்ணை பல்வேறு கடன் மற்றும் காப்பீட்டு விற்பனை தளங்களில் பதிவு செய்துள்ளார். இதன் காரணமாக, மேலாளர் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் விற்பனை அழைப்புகள் வந்து கொண்டே இருந்தது.

அதற்கும் மேல், அந்த மேலாளர் வாடிக்கையாளர்களுடன் பேசும் பணியில் இருப்பதால், யார் உண்மையான வாடிக்கையாளர், யார் விற்பனையாளர் என்பதை புலப்படுத்த முடியாமல் தவிக்கிறார்.

கடைசியில், அவர் தனது எண்ணை மாற்றும் நிலைக்குப் போய் விட்டதாகவும், நேற்று ஊழியரிடம் வந்து தனது பிரச்சனையை பகிர்ந்த போது, ஊழியர் “ஐயா, ஒருவேளை யாராவது உங்களைப் பழிவாங்குறாங்க போல இருக்கே…” என்று பதில் அளித்ததாகவும் பதிவு செய்துள்ளார். இந்த யுக்திக்கு சமூக வலைதளங்களில் பலரும் கைதட்டி பாராட்டி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.