ரயில் பயணிகள் கவனத்திற்கு…!! இன்று முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய இது கட்டாயம்… அமலாகிறது புதிய ரூல்ஸ்.. முக்கிய அறிவிப்பு…!!!
SeithiSolai Tamil July 01, 2025 02:48 PM

இந்திய ரயில்வே துறை ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம் என அறிவித்துள்ளது. அதாவது ஜூலை 1ஆம் தேதி இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு கண்டிப்பாக ஆதார் அட்டை கட்டாயம் என புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதன்படி ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலி மூலமாக உடனடியாக முன்பதிவு செய்ய otp நம்பரை உள்ளிடுவது அவசியம்.

அதாவது டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயனாளர்களின் செல்போனுக்கு ஓடிபி நம்பர் அனுப்பப்படும். இதேபோன்று கவுண்டர்கள், அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் முன்பதிவு செய்யும்போது ஆதார் நம்பருடன் இணைக்கப்பட்ட செல்போன் நம்பருக்கு ஓடிபி வரும்.

இந்த புதிய அறிவிப்பு ஜூலை 15ஆம் தேதி முதல் முழுமையாக அமலுக்கு வர இருக்கிறது. இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் காலை 10 மணி முதல் 10:30 மணி வரையில் ஏசி டிக்கெட்டுகளையும், காலை 11:00 மணி முதல் 11.30 மணி வரையில் ஏசி அல்லாத டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தட்கல் டிக்கெட் முன்பதிவில் போலிப் பெயர்களில் முன்பதிவு செய்யப்பட்டது தெரியவந்த நிலையில் தற்போது இந்திய நிர்வாகம் முன்பதிவு முறைகளில் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.