இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 407 ரன்னில் ஆல்அவுட் ஆனது. 180 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்திருந்தது.
தேனீர் இடைவேளை வரை இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் எடுத்திருந்தது. சுப்மன் கில் 100 ரன்களுடனும், ஜடேஜா 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பின் இறுதியில் ஒட்டுமொத்தமாக இந்தியா 607 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இங்கிலாந்துக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
4ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இறுதி நாளான இன்று விளையாடிய இங்கிலாந்து அணி 68.1 ஓவருக்கு அனைத்து விக்கெட் இழப்பிற்கு வெறும் 271 ரன்களே எடுத்திருந்தது.
இதன்மூலம், இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்த இந்திய அணி, 2வது டெஸ்ட் போட்டியில் வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?