Gujarat Titans: முக்கிய 3 வீரர்களை தூக்க பார்க்கும் குஜராத் டைட்டன்ஸ்.. சுப்மன் இளம் படையில் பலம் சேருமா..?
Tv9 Tamil July 07, 2025 09:48 PM

இந்தியன் பிரீமியர் லீக் 2025 (Indian Premier League 2025) சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பிளே ஆஃப் சுற்றுக்குள் தகுதி பெற்று அசத்தியது. ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்றில் தோல்வியை சந்தித்து வெளியேறியது. குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணியில் கேப்டன் சுப்மன் கில் (Shubman Gill), சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் மற்றும் முகமது சிராஜ் ஆகிய 6 வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். மற்ற வீரர்களில் இருந்து பெரியளவில் செயல்திறன் இல்லை. பல ஊடக அறிக்கையின்படி, ஐபிஎல் 2026 வர்த்தக சாளரம் வருகின்ற கடந்த 2025 ஜூலை 4ம் தேதி முதல் தொடங்கியது. அதன்படி, குஜராத் டைட்டன்ஸ் அணி மற்ற அணிகளிடம் இருந்து 3 வீரர்களை வாங்க கொக்கி போட்டுள்ளது. அவர்கள் யார் என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.

கமிந்து மெண்டிஸ்:

ஐபிஎல் 2025 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் 5 போட்டிகளில் விளையாடினார். இந்தநிலையில், கமிந்து மெண்டிஸை வாங்க குஜராத் டைட்டன்ஸ் அணி ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. கமிந்து மெண்டிஸ் இலங்கையைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஆல்ரவுண்டர் ஆவார். மேலும், 2 கைகளாலும் பந்துவீசும் திறனை கொண்டவர். அதன்படி, இவரை வாங்க குஜராத் டைட்டன்ஸ் போராடி வருகிறது.

சாம் கர்ரன்:

𝟯 𝗣𝗹𝗮𝘆𝗲𝗿𝘀 𝗚𝘂𝗷𝗮𝗿𝗮𝘁 𝗧𝗶𝘁𝗮𝗻𝘀 𝗖𝗮𝗻 𝗔𝗰𝗾𝘂𝗶𝗿𝗲 𝗜𝗻 𝗜𝗣𝗟 𝟮𝟬𝟮𝟲 𝗧𝗿𝗮𝗱𝗲

The IPL 2026 trade window started on July 4.

READ HERE ⬇️https://t.co/uDBXHURNSt

— Cricket.com (@weRcricket)

2025 ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஒரு மிதவேக வேகப்பந்து வீச்சாளருடன் ஒரு பேட்ஸ்மேனையும் தவறவிட்டது. இது, அந்த அணிக்கு பின்னடைவை கொடுத்தது. அதன்படி, குஜராத் டைட்டன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து வீரர் சாம் கர்ரனை வாங்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. கடந்த 2024ம் ஆண்டு முதல் டி20 போட்டிகளில் சாம் கர்ரன் 137.5 இல் 1,684 ரன்களையும், 66 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

ஆரோன் ஹார்டி:

ஆரோன் ஹார்டி ஐபிஎல் 2025 இல் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணிக்காக ஒரு ஆட்டத்தில் கூட விளையாடவில்லை. அதன்படி, டிரேட் விண்டோவில் ஆரோன் ஹார்டியை குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்குவது அவ்வளவு கடினமாக இருக்காது. ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டரான ஆரோன் ஹார்டி 2023 முதல் கிட்டத்தட்ட 31 சராசரியைக் கொண்டுள்ளார். மேலும் அவரது நடுத்தர வேகத்தில் சராசரியாக 25.1 ஐ வைத்திருக்கிறார். ஹார்டி பவர்பிளே மற்றும் மிடில் ஓவர்களில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சில ஓவர்கள் வீச வாய்ப்புள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.