Mulder's Historic 367 Runs: 33 ரன்களில் உலக சாதனை மிஸ்! பிரையன் லாராவின் சாதனையை முறியடிக்காமல் விட்ட முல்டர்!
Tv9 Tamil July 08, 2025 02:48 AM

தென்னாப்பிரிக்கா அணிக்கு முதல் முறையாக டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்ட வியான் முல்டர் (Wiaan Mulder), புலவாயோவில் ஜிம்பாப்வேக்கு எதிராக 334 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 367 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸின் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தனிநபர் ஸ்கோரை அடித்த 5வது பேட்ஸ்மேன் என்ற சாதனையை வியான் முல்டர் படைத்தார். இந்த இன்னிங்ஸில் பிரையன் லாராவின் (Brian Lara) 400 ரன்கள் என்ற உலக சாதனையை முறியடிக்க வியான் முல்டருக்கு வாய்ப்பு கிடைத்தது. தென்னாப்பிரிக்க கேப்டன் வியான் முல்டர் இந்த வரலாற்று சாதனையை முறியடித்திருக்கலாம். ஆனால் அதற்கு முன்பு வியான் முல்டர் டிக்ளேர் அறிவித்தார். இதனால், ஜிம்பாப்வேக்கு (Zimbabwe vs South Africa, 2nd Test) எதிரான இரண்டாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா 626 ரன்கள் எடுத்தது.

வேண்டுமென்றே சாதனையை தவறவிட்டாரா வியான் முல்டர்..?

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் மதிய உணவு இடைவேளையின் போது தென்னாப்பிரிக்கா 6 விக்கெட் இழப்புக்கு 626 ரன்கள் எடுத்திருந்தது. வியான் முல்டர் 367 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது, பிரையன் லாராவின் சாதனையை முறியடிக்க 33 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ஆப்பிரிக்க அணி மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் விளையாட வரவில்லை, ஏனெனில் அது தனது இன்னிங்ஸை 626 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வியான் முல்டர் மதிய உணவு இடைவேளைக்குள் 367 ரன்கள் எடுத்திருந்தார். இன்னும் 34 ரன்கள் மட்டும் வியான் முல்டர் எடுத்திருந்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை வியான் முல்டர் படைத்திருப்பார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 367 ரன்கள் எடுத்ததன்மூலம், டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை வியான் முல்டர் படைத்தார். இதன்மூலம், ஒரு இன்னிங்ஸில் 311 ரன்கள் எடுத்த ஹாஷிம் ஆம்லாவின் சாதனையை முறியடித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னின்ஸில் அதிக ரன்கள் எடுத்த 5வது வீரர்:

𝐑𝐄𝐂𝐎𝐑𝐃 𝐁𝐑𝐄𝐀𝐊𝐄𝐑 🤩

Wiaan Mulder enters the history books with a stunning 367* against Zimbabwe 👏#ZIMvSA | ✍️: https://t.co/EvFis53jyH pic.twitter.com/uSpsmGXlFO

— ICC (@ICC)

  • பிரையன் லாரா – 400
  • மேத்யூ ஹேடன் – 380
  • பிரையன் லாரா – 375
  • மஹேலா ஜெயவர்தனே – 374
  • வியான் முல்டர் – 364
  • டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2வது அதிவேக முச்சதம்:

    டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது இரண்டாவது வேகமான முச்சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் வியான் முல்டர் படைத்தார். வியான் முல்டர் வெறும் 297 பந்துகளில் தனது முச்சதத்தை பூர்த்தி செய்தார். வேகமாக முச்சதம் அடித்த சாதனை முன்னாள் இந்திய தொடக்க வீரர் வீரேந்திர சேவாக்கின் வசம் உள்ளது. சேவாக் வெறும் 278 பந்துகளில் இந்த சாதனையை படைத்துள்ளார்.

    © Copyright @2025 LIDEA. All Rights Reserved.