சசிகுமாரின் ஃப்ரீடம் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்ட்
Tv9 Tamil July 08, 2025 02:48 AM

நடிகர் சசிகுமார் (Actor Sasikumar) நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் ஃப்ரீடம். இந்தப் படத்தை இயக்குநர் சத்ய சிவா எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை லிஜோ மோல் ஜோஷ் (LijoMol Josh) நாயகியாக நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகர்கள் சுதேவ் நாயர், மாளவிகா அவினாஷ், போஸ் வெங்கட், மு ராமசாமி, சரவணன், ரமேஷ் கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள்னார். தொடர்ந்து இரண்டாவது முறையாக நடிகர் சசிகுமார் இந்தப் படத்தில் ஈழத் தமிழராக நடித்துள்ளார். நடிகர் சசிகுமார் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் டூரிஸ்ட் ஃபேமிலி. பொருளாதார சிக்கல் காரணமாக கடல் வழியாக இலங்கையில் இருந்து தப்பி தமிழகத்திற்கு வருகிறார் சசிகுமார்.

இவ்வளவு சீரியசான கதையை முற்றிலும் ஃபீல் குட் படமக இயக்கி இருந்தார் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். இந்த டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பிரபலங்களும் ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்தனர். ஆனால் ஈழ தமிழர்கள் குறித்த இந்த ஃப்ரீடம் படம் டூரிஸ்ட் ஃபேமிலி போல நிச்சயமாக இருக்காது என்று சசிகுமார் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஃப்ரீடம் படத்திற்கு யு/ஏ கொடுத்த சென்சார் போர்ட்:

நடிகர் சசிகுமார் நடிப்பில் ஜூலை மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஃப்ரீடம். இந்தப் பாடத்தில் இருந்து முன்னதாக டீசர் மற்றும் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது. அது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றது. இந்த நிலையில் படத்திற்கு சென்சார் போர்ட் தணிக்கை சான்றிதழை வழங்கியுள்ளது.

அதன்படி நடிகர் சசிகுமாரின் ப்ரீடம் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்குள் வந்த ஈழ தமிழர்களுக்கு எதிராக எப்படி அடக்குமுறை செயல்படுத்தப்பட்டது என்பது குறித்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

மேலும் இந்தப் படம் கடந்த 1995-ம் ஆண்டு இலங்கை தமிழர்களுக்கு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவான படம் என்று நடிகர் சசிகுமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் படம் குறித்து நடிகர் சசிகுமார் பேசியது தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ஃப்ரீடம் படத்தின் சான்றிதழ் குறித்து வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Sasikumar’s #Freedom Censored ‘U/A’✅
Story based on Real incidents happened in 1995 at Vellore Fort !!
In theatres from this Thursday 🤝 pic.twitter.com/uyNqL5KlKc

— AmuthaBharathi (@CinemaWithAB)

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.