நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக மேலும் ஒரு வழக்கு பதிவு!
Tv9 Tamil July 08, 2025 02:48 AM

கோலிவுட் சினிமாவில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா (Actress Nayanthara). இவர் தமிழில் 2005-ம் ஆண்டு வெளியான ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். நடிகர் சரத்குமார் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா நாயகியாக நடித்து இருந்தார். இந்தப் படத்தில் நடிகை நயன்தாராவின் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் நாயகியாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித், தனுஷ், சிம்பு என பலருடன் இணைந்து நடித்துள்ளார். தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்த நடிகை நயன்தாரா பின்பு நாயகிகளை மையமாக வைத்து வெளியாகும் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

இந்த நிலையில் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரௌடிதான் படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த திருமணத்தையும் நயன்தாராவின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு ஆவணப்படத்தை வெளியிட நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது.

நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக மேலும் ஒரு வழக்கு:

அதன்படி நயன்தாராவின் ஆவணப்படமான Nayanthara: Beyond The Fairy Tale கடந்த நவம்பர் மாதம் 18-ம் தேதி 2024-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.

அந்த ஆவணப்படத்தில் நானும் ரௌடிதான் என்ற படத்தை வொண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தை அத்தனை பொருட் செலவில் தயாரித்துள்ள நிலையில் படத்தின் காட்சிகளை அனுமதி இன்றி பயன்படுத்தியுள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. மேலும் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடும் கோரினர்.

இந்த நிலையில் தற்போது இந்த ஆவணப் படத்திற்கு எதிராக தற்போது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன்படி 2005-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியானாது சந்திரமுகி படம். இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா நாயகியாக நடித்து இருந்தார். இந்தப் படத்தின் காட்சிகளும் நயன்தாராவின் ஆவணப்படத்தில் பயன்படுத்தப்பட்டு இருந்தது.

இதனை எதிர்த்து சந்திரமுகி படத்தின் உரிமையைப் பெற்ற ஏபி இண்டர்நெஷனல் நிறுவனம் சந்திரமுகி படத்தின் காட்சிகளை நீக்கக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்துள்ளது.

ஆவணப்படம் குறித்து நடிகை நயன்தாராவின் எக்ஸ் தள பதிவு:

Nayanthara: Beyond the Fairy Tale!!
Thank You🙏🏻 #SpreadLove pic.twitter.com/8ZLLmjGADd

— Nayanthara✨ (@NayantharaU)

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.