நோ ஃபேமிலி… நோ ஃப்ரண்ட்ஸ்… கூலி படத்திற்காக இரண்டு வருஷம் கடினமா உழைச்சிருக்கேன் – லோகேஷ் கனகராஜ்
Tv9 Tamil July 08, 2025 02:48 AM

கோலிவுட் சினிமாவில் ஆக்‌ஷன் படங்களை இயக்குவதில் முன்னிலை வகிப்பது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj) என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இவர் இயக்கும் படங்கள் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்து காணப்படும். இந்த நிலையில் இவர் தற்போது நடிகர் ரஜினிகாந்தை வைத்து கூலி என்ற படத்தை இயக்கி உள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூலி படத்திற்காக தான் கடினமாக உழைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தவித குடும்ப நிகழ்ச்சிகளிலோ அல்லது நண்பர்களுடனே நேரம் ஒதுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தது தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியது என்ன?

அந்த பேட்டியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியதாவது, ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு என்னோட படம் ஒன்னு ரிலீஸாக போகுது. திரும்பி பாத்தா என் வாழ்க்கையில் 2 வருசம் நான் என்ன பண்ணேன்னு எனக்கு நியாபகம் இல்லை. முழுக்க முழுக்க இந்த படத்திற்காகவே நேரம் செலவிட்டு வந்தேன்.

கடந்த 2 வருசத்துல குடும்பத்தில் நடந்த எந்த நிகழ்ச்சியிலும் கலந்துக்க நேரம் இல்ல. அப்பறம் ஃப்ரண்ட்ஸ் கூட சுத்தமா எந்த மீட்டும் இல்ல. இப்படியே ரெண்டு வருஷம் முழுக்க முழுக்க கூலி படத்திற்காகவே நேரம் செலவிட்டு வந்தேன் என்றும் தெரிவித்து இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

இணையத்தில் வைரலாகும் லோகேஷ் கனகராஜின் வீடியோ:

There are many other Big Directors like him earning in Crores, but his dedication is unmatchable for every films🫡🔥
Not wasting Dates, Not wasting Producers money, Completing film at promised time💯#Coolie should win Big for Him🤞pic.twitter.com/jSImEFNUa5

— AmuthaBharathi (@CinemaWithAB)

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் கூலி படம்:

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள இந்த கூலி படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து காண்கின்றது. அதற்கு காரணம் படத்தில் நடிக்கும் நடிகர்கள்தான். படம் தொடர்பாக தொடர்ந்து அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.