தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் மகேஷ்பாபு. இவர் தற்போது மீண்டும் சிக்கலில் சிக்கி உள்ளார். அதாவது ரியல் எஸ்டேட் மோசடி தொடர்பாக ரங்கா ரெட்டி மாவட்ட நுகர்வோர் மன்றம் மகேஷ்பாபுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளது. அதாவது சாய் சூர்யா டெவலப்பர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு மகேஷ் பாபு விளம்பர தூதராக பணியாற்றியுள்ளார்.
இந்த நிறுவனம் மகேஷ்பாபுவின் படத்தை காட்டி அங்கீகரிக்கப்படாத மனைகளை விற்று மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் ரங்கா ரெட்டி மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் புகார் அளித்தனர். அதன்படி அந்நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் மகேஷ்பாபு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்களின் ப்ரோமோஷன்களில் ஈடுபட்ட நடிகர் மகேஷ்பாபுக்கு ரூ.3.4 கோடி சம்பளமாக வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வருகிற 8-ம் தேதிக்குள் நுகர்வோர் மன்றத்தில் நடிகர் மகேஷ்பாபு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.