உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து திருப்புவனம் அஜித்குமார் கொலை சம்பவத்தை கண்டித்து த.வெ.க. நடத்தும் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் இறந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. த.வெ.க. தலைவர் நடிகர் விஜயும் கண்டனம் தெரிவித்து உயிரிழந்த அஜித்குமார் வீட்டுக்கு சென்று ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார். மேலும், அவரின் மரணத்துக்கு நீதி கேட்டு, சென்னையில் ஜூலை 3ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்து இருந்தார்.
போராட்டத்துக்கு போலீஸ் தரப்பில் இருந்து அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து, ஜூலை 6ம் தேதி போராட்டம் நடத்த அனுமதி கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் த.வெ.க., தரப்பு முறையிட்டது. ஆனால் அனுமதி கிடைப்பதில் தாமதம் நிலவியதால், போராட்டம் மீண்டும் தள்ளிப்போனது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் த.வெ.க., தொடர்ந்த வழக்கில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து,தற்போது காவல்துறையும் போராட்டம் நடத்த உரிய அனுமதியை வழங்கி உள்ளது. ஆனால் சென்னை எழும்பூர் ராஜ ரத்தினம் மைதானம் அருகே நடத்தாமல் சிவானந்தா சாலையில் போராட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?