தாய்லாந்தில் நடந்த ஒரு வினோத திருமணம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியையும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோரே திருமணம் செய்து வைத்துள்ளனர். அதாவது ஒரு குடும்பத்தில் ஒரு தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும்போது அது ஆண் மற்றும் பெண்ணாக பிறந்தால் அவர்களை சகோதர சகோதரிகளாக பார்க்காமல் திருமணம் செய்து வைப்பார்கள். இது தாய்லாந்தின் புத்த மத வழக்கமாகும்.
அதாவது ஆண் பெண் என இரட்டை குழந்தைகளாக பிறப்பவர்கள் முன் ஜென்மத்தில் காதலர்களாக இருந்திருப்பார்கள் எனவும் உடனடியாக அவர்களை சேர்த்து வைக்காவிட்டால் நாட்டில் துரதிஷ்டம் பரவும் என்று புத்த மதத்தை சேர்ந்தவர்கள் நம்புவதால் இதுபோன்று திருமணம் செய்து வைக்கின்றனர்.
மேலும் குழந்தைகளுக்கு திருமணம் நடந்த வீடியோ சமூக வலைகள் அணில் வைரலாகி வருகிறது.