நாளை முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் பயணம்..!
Dinamaalai July 08, 2025 06:48 PM

 


திருவாரூர் மாவட்டத்தில் நாளை புதன்கிழமை மற்றும் நாளை மறுதினம் வியாழக்கிழமை ஆகிய 2 நாட்கள் முதல்வர் ஸ்டாலின்  களஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறார்.இதற்காக அவர் நாளை காலை 9 மணிக்கு  சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்கிறார். 

அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர் சென்றடைகிறார். அங்கு கலைஞர் கோட்டத்தில் சிறிது நேரம் ஓய்வு எடுக்க உள்ளார். அதன்பின்னர் அவர், மாலையில் காட்டூர் சென்று அங்கு அவருடைய பாட்டி அஞ்சுகம் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.திருவாரூர் ரயில் நிலையம் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையையும் முதல்வர்  ஸ்டாலின் திறந்துவைக்கிறார். 

அவர் 'ரோடு ஷோ' மூலம் சாலையில் நடந்து சென்று தி.மு.க.வினர், பொதுமக்களின் வரவேற்பை ஏற்கிறார் அன்றைய தினம் இரவு திருவாரூரில் தங்குகிறார். 10ம் தேதி அன்று காலை திருவாரூர் பேருந்து நிலையம் அருகே நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கிறார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். இந்த விழா முடிவடைந்ததும், முதல்வர்  ஸ்டாலின் திருவாரூரில் இருந்து சாலை மார்க்கமாக திருச்சி விமான நிலையம் வருகிறார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.