“வாழ்க்கையில நமக்கு என்ன தேவை எதை இழந்து கிட்டு இருக்கோம்னு தெரிஞ்சுக்கணுமா”… அப்ப கண்டிப்பா போய் இந்த படத்தை பாருங்க… நடிகை நயன்தாரா..!!!
SeithiSolai Tamil July 08, 2025 10:48 PM

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா சமீப காலங்களாக இன்ஸ்டாகிராமில் அதிக ஆர்வமாக செயல்படுகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட இன்ஸ்டால் ஸ்டோரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “இந்த அவசரமான உலகில் நம்ம எதை எல்லாம் இழக்கிறோம். இந்த பரபரப்பான உலகத்தை விட்டு விலகி உண்மையான வாழ்க்கையை உணர விரும்பினால், குழந்தைகளை கூட்டிச்சென்று மலையேறுங்கள் அல்லது ஆறு, ஏரிகளில் நீந்தி விளையாடுங்கள்.

அப்படி இல்லை எனில் மிகவும் எளிமையாக இயக்குனர் ராம்சாரின் “பறந்து போ” படத்திற்கு அழைத்துச் சென்று பாருங்கள். இந்த பரபரப்பான உலகத்தில் நம்ம வாழ்க்கைக்கு எது தேவை எதையெல்லாம் இழந்து கொண்டு வருகிறோம் என்பதை இந்த படம் அழகாக எடுத்துக்காட்டி உள்ளது.

நான் பார்த்த மிக இனிமையான படங்களில் இதுவும் ஒன்று. ராம் சார் நீங்கள் சிறந்த இயக்குனர் மேலும் சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி என ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டு இருந்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.