குடும்ப பிரச்சனையை போலீஸ் தீர்க்கல... டிஜிபி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்!
Dinamaalai July 09, 2025 04:48 AM

 


டிஜிபி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார். ஜூலை 5 ம் தேதி  சென்னை பெருநகர காவல், கிழக்கு மண்டல காவல் கட்டுப்பாட்டறையின் தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பேசிய நபர், 'டிஜிபி அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்துள்ளேன். அது சற்று நேரத்தில் வெடித்துச் சிதறும். முடிந்தால் தடுத்துப்பாருங்கள்' எனக் கூறியுள்ளார். அத்துடன்  போலீஸாரை  அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசி இணைப்பை துண்டித்துள்ளார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் இது குறித்து  போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மெரினா போலீஸார் வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உடன் டிஜிபி அலுவலகம் விரைந்து சென்றனர்.  சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சோதனை முடிவில் சந்தேகப்படும் படியான எந்தப் பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை. அதன் பிறகே புரளியை கிளப்பும் வகையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, மிரட்டல் விடுக்கப்பட்ட செல்போன் எண்ணை அடிப்படையாக வைத்து சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் துப்பு துலக்கப்பட்டது. இதில், மிரட்டல் விடுத்தது சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த தவசிலிங்கம்  என்பது தெரியவந்தது.  


 மிரட்டல் விடுத்தது ஏன் என கைதான தவசி லிங்கம்  எனக்கும் மனைவிக்கும் குடும்பப் பிரச்சினை உள்ளது. இதனால், கோபித்துக் கொண்டு மனைவி பிரிந்து சென்று விட்டார். மனைவியை சேர்த்து வைக்கும்படி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.  போலீஸார் என்னை அலைக்கழித்தனர். இதனால், ஏற்பட்ட விரக்தியில் போலீஸாரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் டிஜிபி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன் என பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார் .  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.