“நான் தமிழ்நாட்டின் ஜாதகத்தையே பார்த்துட்டேன்”… இன்னும் 65 நாள்தான்… அதுக்குள்ள அன்புமணி ராமதாஸ் பிரச்சனை தீர்ந்திடும்… எம்எல்ஏ சதாசிவம்…!!!!
SeithiSolai Tamil July 09, 2025 05:48 AM

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன், செயல் தலைவர் டாக்டர் அன்புமணிக்குள் ஏற்பட்ட மோதல் விவகாரம் குறித்து, பாமக சட்டப்பேரவை உறுப்பினர் சதாசிவம் நேர்காணல் ஒன்றில் பேசினார். இதில், “இது ஒரு தற்காலிக சூழ்நிலை. நான் தமிழ்நாட்டின் முழு ஜாதகத்தையும் பார்த்தேன். இன்னும் 60–65 நாட்களில் இந்த பிரச்சனை தீரும்” என அவர் கூறினார். “அண்ணன் அன்புமணி அவர்கள் நேராக பதில் சொல்லுவார், அவருடைய நிலைப்பாடு தெளிவாக இருக்கும். ஆனால், நான் எம்எல்ஏ. எனவே எனக்குத் தேவையான அளவில்தான் பதில் சொல்ல முடியும்” என்றார்.

ஊடகவியலாளர்கள் தொடர்ந்து கேட்கும் வகையில், கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பம், பொதுமக்கள் மத்தியில் பாமகாவின் வாக்கு வங்கியை பாதிக்குமா என கேட்டதற்கு, சதாசிவம் பதிலளிக்கையில், “இது எல்லா கட்சிகளிலும் நடக்கும். நீர் குமிழி மாதிரியான சூழ்நிலைதான். இது விரைவில் மாறும். பொறுப்பாக, ஊடக நண்பர்கள் வேறு வளர்ச்சி, வேலைவாய்ப்பு, சுகாதார மேம்பாட்டு விஷயங்களை எழுதி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மேலும் சின்ன சின்ன விஷயங்களை பெரிதாக்கி பேச வேண்டாம்” என கேட்டுக்கொண்டார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.