நாம் விருப்பமில்லாமல் ஒதுக்கும் கொத்தமல்லியில் இவ்வளவு நன்மைகளா? ஆச்சரிய தகவல்
Tv9 Tamil July 09, 2025 09:48 AM

கொத்தமல்லி (Coriander) ஒரு அற்புதமான வீட்டு மருந்து. நம் அம்மா அதனை தினமும் சமையலில் சேர்த்தாலும், சாப்பிடும்போது அதனை பிளேட்டின் ஓரமாக எடுத்து வைத்துவிட்டுதான் சாப்பாட்டில் கை வைக்கிறோம். இந்த கட்டுரையை படித்த பிறகு அப்படி செய்ய மாட்டீர்கள். காரணம் அவற்றில் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. சமையலில் கூட்டு, குழம்பு, ரைத்தா அல்லது சட்னி எதுவாக இருந்தாலும், கொத்தமல்லி இலைகள் ஒவ்வொரு உணவின் சுவையையும் நறுமணத்தையும் மேம்படுத்துகின்றன. இந்த இலைகள் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நம் உடலுக்கு தேவையான பல நன்மைகளைக் கொண்டுள்ளன. இதில் மறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள் நமது ஆரோக்கியத்தை வலுப்படுத்த உதவுகின்றன. ஆயுர்வேதத்தில் கொத்தமல்லி மருத்துவ குணம் கொண்டதாகவும் கருதப்படுகிறது. கொத்தமல்லி பல பாரம்பரிய மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. நவீன காலத்திலும் கூட அதன் முக்கியத்துவம் குறையவில்லை. அமெரிக்க FDA மற்றும் ஐரோப்பாவில் (Europe) உள்ள உணவு பாதுகாப்பு நிறுவனங்கள் கொத்தமல்லியை பாதுகாப்பான, பயனுள்ள உணவாக ஏற்றுக்கொண்டுள்ளன.

கொத்தமல்லியின் நன்மைகள்

அமெரிக்க தேசிய மருத்துவ நூலகத்தின்படி, கொத்தமல்லி இலைகளில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் காணப்படுகின்றன. அவற்றில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே உள்ளன, அவை கண்கள், தோல் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் முக்கியமானவை. இதனுடன், ஃபோலேட், கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற தனிமங்களும் இதில் காணப்படுகின்றன. இவை உடலுக்கு ஆற்றலை வழங்குவது மட்டுமல்லாமல், நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகின்றன.

 செரிமான அமைப்பை மேம்படுத்தும்

கொத்தமல்லி சாப்பிடுவது செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. காலையில் வெறும் வயிற்றில் இந்த இலைகளை மென்று சாப்பிடுவது அல்லது அதனை ஊற வைத்த தண்ணீரைக் குடிப்பது வாயு, அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து உணவை ஜீரணிக்க உதவுகிறது. குடல்களைச் சுத்தப்படுத்துகிறது.

இதையும் படிக்க: தினமும் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

கொத்தமல்லியில் உள்ள வைட்டமின் சி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும்போது, ​​சளி, இருமல், காய்ச்சல் போன்ற பருவகால நோய்கள் எளிதில் வராது. கொத்தமல்லி இலைகளில் இரத்த சர்க்கரையை சமநிலையில் வைத்திருக்கும் சில கூறுகள் இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்

கொத்தமல்லியில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது கொழுப்பையும் குறைக்கிறது. ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் ஏ சருமத்தை பிரகாசமாக்குகின்றன. முகத்தில் உள்ள முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளைக் குறைக்க உதவுகிறது. அவை முடி உதிர்தலையும் தடுக்கின்றன.

மூட்டு வலியைத் தடுக்கும்

இது உடலை நச்சு நீக்குகிறது. கொத்தமல்லி நீர் உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. இது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் சரியாக செயல்பட உதவுகிறது. இதில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் எலும்புகளை வலுப்படுத்தும். கொத்தமல்லியை தொடர்ந்து சாப்பிடுவது உடல் பலவீனம் அல்லது மூட்டு வலி போன்ற எலும்பு பிரச்னைகளைக் குறைக்கும்.

துர்நாற்றத்தைப் போக்கும்

கொத்தமல்லியில் காணப்படும் ஃபோலேட், கர்ப்பிணிப் பெண்களுக்கும் அவர்களின் குழந்தையின் வளர்ச்சிக்கும் அவசியம். கர்ப்ப காலத்தில் இது ஒரு நல்ல ஊட்டச்சத்து உணவாகும். கொத்தமல்லி இலைகள் புத்துணர்ச்சியூட்டும் நறுமணத்தைக் கொண்டுள்ளன. அவற்றை மென்று சாப்பிடுவதால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.