India vs England 3rd Test: லார்ட்ஸில் இந்திய அணியின் சாதனை எப்படி..? சுப்மன் கில் படை மீண்டும் மாயாஜாலத்தை நிகழ்த்துமா..?
Tv9 Tamil July 09, 2025 01:48 PM

இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான ஐந்து போட்டிகள் (India vs England Test Series) கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தற்போது தலா ஒரு வெற்றிகளை பதிவு செய்து, தொடரை 1-1 என சமன் செய்துள்ளன. முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. அதே நேரத்தில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி (Indian Cricket Team) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதிலடி கொடுத்தது. இந்தநிலையில், இரு அணிகளுக்கும் இடையில் வருகின்ற 2025 ஜூலை 10ம் தேதி லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் (Lord’s Cricket Ground) தொடங்கவுள்ள மூன்றாவது டெஸ்டில் யார் வெற்றி பெறுவார்கள் என்று அனைவரின் பார்வையும் உள்ளது. இந்த முக்கியமான மோதலுக்கு முன்னதாக, லார்ட்ஸில் இந்தியாவின் டெஸ்ட் சாதனைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

லார்ட்ஸில் இந்திய அணியின் டெஸ்ட் வரலாறு:

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பல ஆண்டுகளாக லார்ட்ஸில் இந்திய அணி செயல்திறன் ஆதிக்கம் செலுத்துவதாக இல்லை. இந்த வரலாற்று சிறப்புமிக்க மைதானத்தில் இந்திய அணி இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அவற்றில், இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. 4 போட்டிகள் டிரா ஆன நிலையில், 12 போட்டிகளில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது.

அதன்படி, பாரம்பரியமிக்க லார்ட்ஸ் ஸ்டேடியம் இந்திய அணிக்கு கடினமான ஸ்டேடியமாகவே இருந்து வருகிறது இருப்பினும், சமீபத்திய ஆட்டங்களில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

கடைசி 3 போட்டிகளில் 2 வெற்றிகள்:

ஒட்டுமொத்த எண்ணிக்கையை கணக்கிட்டால் இந்திய அணி பின்னடைவை சந்திருந்தாலும், லார்ட்ஸில் கடைசியாக விளையாடிய 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 2-ல் வெற்றி பெற்றுள்ளது, இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது.

  • கடந்த 2014ம் ஆண்டு எம்.எஸ். தோனியின் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து அணியை 95 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
  • கடந்த 2018 ஆம் ஆண்டில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
  • மிக சமீபத்தில் 2021 ஆம் ஆண்டில் மீண்டும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 151 ரன்கள் வித்தியாசத்தில் மறக்கமுடியாத வெற்றியை பதிவு செய்தது.
2வது டெஸ்டில் சொதப்பிய இங்கிலாந்து அணி

48 hours to go.

🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿🇮🇳 pic.twitter.com/EPKuuzc3Zg

— Lord’s Cricket Ground (@HomeOfCricket)

எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி, தங்கள் சொந்த மைதானத்தில் தங்கள் பலத்திற்கு ஏற்றவாறு சிறப்பாக விளையாடிய போதிலும், மிகவும் மோசமாக தோல்வியை சந்தித்தது. அதேநேரத்தில், சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்தியதே இந்த வெற்றிக்கு காரணம்.

இந்தியா vs இங்கிலாந்து 3வது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி:

பென் டக்கெட், ஜாக் கிராலி, ஓலி போப், ஜேக்கப் பெத்தேல், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (வார), ஜேமி ஓவர்டன், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டோங், ஷோயப் பஷீர், சாம் குக், கஸ் அட்கின்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.