ராஜஸ்தான் மாநிலத்தில் சுருவில் இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானது குறித்து அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தின் பானுதா கிராமத்தில் இந்திய விமானப் படையின் ஜாகுவார் விமானம் விபத்துக்குள்ளானதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில், விமானி உட்பட இருவர் பரிதாபமாக பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதற்கட்ட தகவல்களின்படி, விபத்துக்குள்ளான விமானம் கீழே விழுந்து தீப்பிடித்துள்ளது. சேதமடைந்த விமானத்தில் இருந்து விமானியின் உடல் மிகவும் மோசமான நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் என்ன? பலியான விமானி மற்றும் மற்றொரு நபர் யார்? என்ற அடையாளங்கள் இன்னும் இந்திய ராணுவம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தால் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
திடீரென பயங்கர சத்தம் கேட்டதாகவும், வயல் வெளியில் கரும்புகை வெளிப்பட்டதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அபிஷேக் சுரானா மற்றும் காவல் துறையினர், இந்திய ராணுவத்தினர் விபத்து நடந்தப் பகுதிக்கு விரைந்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?