வெள்ளரிக்காய் (Cucumber) சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும் ஒரு காய்கறி. இதில் ஏராளமான நீர்ச்சத்து உள்ளது. கோடை காலம் மட்டுமின்றி மற்ற பருவ காலங்களிலும் வெள்ளரிக்காய் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இது சாப்பிடுவது உடலை குளிர்விக்கும். ஒவ்வொருவரும் வெள்ளரிக்காயை தங்கள் உணவில் வெவ்வேறு வழிகள் எடுத்து கொள்கிறார்கள். அதன்படி, காலையில் சாலட், வெள்ளரிக்காய் சாண்ட்விச் தயாரிப்பதன் மூலமோ அல்லது ஜூஸ் மூலமோ எடுத்துக்கொள்கிறார்கள். அதன்படி, இதை உடலுக்கு சூப்பர் புட் என்று சொல்லலாம். இருப்பினும், சிலர் வெறும் வயிற்றில் (Empty Stomach) வெள்ளரிக்காய் சாப்பிட்டால், அது அவர்களுக்கு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
வெள்ளரிக்காய் உடலை குளிர்விக்கவும், நீரேற்றமாக வைத்திருக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் நன்மை பயக்கும். இதில் வைட்டமின் சி உள்ளது மற்றும் சருமத்திற்கும் நன்மை பயக்கும். பெரும்பாலான மக்கள் இதை சாலட்டில் சாப்பிடுகிறார்கள். பலர் காலையில் வெறும் வயிற்16666றில் சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் சிலர் வெறும் வயிற்றில் வெள்ளரிக்காய் சாப்பிட்டால், அது அவர்களுக்கு சேராது. ஒரு சிலருக்கு உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும். வெறும் வயிற்றில் வெள்ளரிக்காய் சாப்பிடுவது அமிலத்தன்மையை ஏற்படுத்தும். இதனால் செரிமானத்தில் சிக்கல் உண்டாகும்.
ALSO READ: தினமும் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
வயிறு சுத்தமாகவும், அமிலத்தன்மை பிரச்சனை இல்லாதவர்களும் வெறும் வயிற்றில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அதிக அமிலத்தன்மை பிரச்சனை உள்ளவர்கள் அல்லது வாதம், பித்தம் மற்றும் கபம் உடலில் சமநிலையில் இல்லாதவர்கள், வெறும் வயிற்றில் வெள்ளரிக்காய் சாப்பிடக்கூடாது. இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு வெள்ளரிக்காய் சாப்பிட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டால், பழங்கள், அத்திப்பழம், திராட்சை அல்லது லேசான காலை உணவை சாப்பிட்ட பிறகு வெள்ளரிக்காயை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். அதேநேரத்தில், வெள்ளரிக்காயை சாப்பிடுவதற்கு முன்பு அமிலத்தன்மையை ஏற்படுத்தும் பழங்கள் மற்றும் பொருட்களை சாப்பிட கூடாது.
வெறும் வயிற்றில் சில வெள்ளரிக்காயை சாப்பிடக்கூடாதே தவிர, மற்ற நேரங்களில் தாராளமாக வெள்ளரிக்காயை எடுத்துக்கொள்ளலாம். இதில் பொட்டாசியமும் நிறைந்துள்ளது. வைட்டமின் சி மற்றும் கே இதில் காணப்படுகின்றன. இது மூட்டுவலி, இதயம் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கும் நல்லது. மேலும், இது வயிற்று வலிக்கும் நன்மை பயக்கும்.
நீண்டகாலமாக மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் வெள்ளரிக்காயை எடுத்து கொள்வதன் மூலம், வயிற்றை சுத்தம் செய்யும். வெள்ளரிக்காய், புதினா மற்றும் எலுமிச்சை துண்டுகளை இரவு முழுவதும் ஊறவைத்து பின்னர் குடிப்பதன் மூலம் டீடாக்ஸ் வாட்டர் தயாரிக்கப்படுகிறது. இந்த டீடாக்ஸ் வாட்டர் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். செரிமானத்துடன், வெள்ளரிக்காய் சருமத்திற்கும் நன்மை பயக்கும்.
தோல் மற்றும் முடிவெள்ளரிக்காய் சருமத்திற்கும் கூந்தலுக்கும் மிகவும் நன்மை பயக்கும். இது சருமத்தை டோன் செய்வதிலும் பெரிதும் உதவுகிறது. இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது. இது சருமத்தின் பளபளப்பைப் பராமரிக்க உதவுகிறது. பலர் வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களில் வைத்திருப்பதால் கண்களுக்கு நிவாரணம் கிடைக்கிறது. வீக்கம், எரிச்சல் மற்றும் கருவளையங்களைக் குறைக்கவும் இது உதவுகிறது.
ALSO READ: காலையில் எழுந்ததும் முதலில் சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன? ஆயுர்வேத மருத்துவர்கள் அறிவுரை
மூட்டுவலி, அமிலத்தன்மை பிரச்சனை, அதிகப்படியான ஏப்பம் போன்ற நிலைகளில் வெள்ளரிக்காயை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. பலருக்கு வெள்ளரிக்காய் ஒவ்வாமை இருப்பதால், அதை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், ஏதேனும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தால், அதன் பிறகும் வெள்ளரிக்காயை சாப்பிடக் கொடுக்கக்கூடாது.