மேற்கு ஆப்பிரிக்கா நைஜீரியாவில் அமைந்துள்ளது கானோ மாகாணம். இந்தப் பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பேருந்து ஒன்று 23 பயணிகளுடன் ஜாரியாவில் இருந்து புறப்பட்ட நிலையில் கானோ நோக்கி சென்றது.
இந்நிலையில் பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் அதே சாலையில் எதிரே வந்த லாரி மீது வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 2 பெண்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். அதில் 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறை விடுத்த செய்திக்குறிப்பில் பேருந்து ஓட்டுநர் சாலை விதிகளை மீறியதால் விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?