பச்சை மிளகாய் காரமானது மட்டுமல்ல… அதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா?
Tv9 Tamil July 10, 2025 05:48 AM

நாம் பெரும்பாலும் பல சமையல் குறிப்புகளில் காரமான சுவைக்காக பச்சை மிளகாயைப் பயன்படுத்துகிறோம். பலருக்கு அதன் சுவை பிடித்திருந்தாலும்,  சிலருக்கு, உணவில் இருக்கும் மிளகாயை தெரியாமல் கடித்துவிட்டால் வாய் எரிய ஆரம்பித்துவிடும். வெறும் சுவைக்காக உணவில் சேர்க்கப்படும் பச்சை மிளகாய், நம் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆம், பச்சை மிளகாய் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். பச்சை மிளகாயில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இவை உடல் எடை குறைக்க, செரிமானத்தை மேம்படுத்துதல், சரும ஆரோக்கியத்தைப் பேணுதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைத்தல் ஆகியவற்றிற்கு உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

உண்மையில், பச்சை மிளகாயின் பெயரைக் கேட்டாலே பலர் பயந்து விடுகிறார்கள். அதன் காரம் காரணமாக பலர் இதைத் தவிர்ப்பார்கள். இருப்பினும், அதன் ஊட்டச்சத்து மதிப்பு உங்களுக்குத் தெரிந்தால், நீங்கள் அதைத் தவறவிட விரும்ப மாட்டீர்கள். பச்சை மிளகாய் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: கருப்பு மிளகில் இவ்வளவு சிறப்புகளா? 10 அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் இதோ!

பச்சை மிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
  • பச்சை மிளகாயில் வைட்டமின் சி அதிகம் காணப்படுகிறது. மேலும் இதில் பீட்டா கரோட்டின் உள்ளது. இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களும் நம் சருமத்திற்கு நல்லது. இது சருமத்தின் பளபளப்பை அளித்து, புத்துணர்வு அளிக்கிறது.
  • பச்சை மிளகாயில் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. நமது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க,  இது மிகவும் முக்கியமானது. இதன் காரணமாக, நம் உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது. உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.  இதன் மூலம், உங்களுக்கு சோர்வு ஏற்படாமல் தடுக்கும். இரும்புச்சத்து நம் சருமத்திற்கும் நல்லது.. மேலும் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

இதையும் படிங்க: காலையில் வெறும் வயிற்றில் வெள்ளரிக்காய் சாப்பிடும் பழக்கமா..? உடலில் இந்த பிரச்சனை இருந்தால் தவிர்ப்பது நல்லது!

  • பச்சை மிளகாயில் கேப்சைசின் எனப்படும் ஒரு அமிலம் காணப்படுகிறது. இது மூளையில் உள்ள ஹைபோதாலமஸ் என்ற அமைப்பை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. இது உடல் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைத்திருக்கும். இதனாலல் இந்தியா போன்ற வெப்பமான நாடுகளில் உள்ளவர்களுக்கு பச்சை மிளகாயை மென்று சாப்பிடுவது நன்மை பயக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
  • பச்சை மிளகாயில் வைட்டமின் சி இருப்பதால், அது நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுநோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. தொற்று காரணமாக சளி மற்றும் இருமலால் அவதிப்படுபவர்களுக்கு, பச்சை மிளகாய் சளியை குறைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இதனால் அடிக்கடி சளி தொல்லையால் அவதிப்படுபவர்கள் அதிகம் உணவில் பச்சை மிளகாயை சேர்த்துக்கொள்ளலாம்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9 Tamil பொறுப்பேற்காது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.