பைக் மீது லாரி மோதி விபத்து... கவுன்சிலர் மகன் உயிரிழப்பு!
Dinamaalai July 10, 2025 01:48 PM

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் கவுன்சிலரின் மகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தலைவன்வடலி கிராமம், வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கேசவன். ஆத்தூர் பேரூராடசி கவுன்சிலாக உள்ளார். இவரது மகன் சதீஷ் (30) நேற்று காலை வேலை விஷயமாக தூத்துக்குடிக்கு பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார்.

புல்லாவெளி அருகே சென்றுக் கொண்டிருந்த போது, தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற லாரி, சதீஷ் பைக் மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சதீஷை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஆத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து லாரியை ஓட்டி வந்த ராமநாதபுரம் அண்ணா நகரைச் சேர்ந்த காட்டுராஜா மகன் தட்சனாமூர்த்தி (55) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.