யாரும் நம்பாதீங்க... ரூ.23 லட்சத்தில் கோல்டன் விசா உண்மையில்ல... எமிரேட்ஸ் அரசு மறுப்பு!
Dinamaalai July 10, 2025 11:48 PM

இந்தியர்கள் துபாயில் ரூ.23.30 லட்சம் கட்டணம் செலுத்தி வாழ்நாள் முழுமைக்கான கோல்டன் விசாவை பெறலாம் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதனை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சின் கோல்டன் விசா பெறுவதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டிருப்பதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.

இதன்படி, ரூ.23.30 லட்சம் கட்டணம் செலுத்தி கோல்டன் விசா பெறலாம் இந்த புதிய வகை கோல்டன் விசாவுக்கு முதற்கட்டமாக இந்தியாவும், வங்கதேசமும் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் கோல்டன் விசா பெற விண்ணப்பிக்கும் இந்தியர்களின் விண்ணப்பங்களை ஆய்வு செய்ய ராயத் குழும நிறுவனம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

View this post on Instagram

A post shared by Research In and Out (@researchinandout)

பொதுவாக, ஐக்கிய அரபு எமிரேட்சின் கோல்டன் விசா பெற இந்தியர்கள் அந்நாட்டில் ரூ.4.66 கோடி மதிப்புள்ள சொத்தில் முதலீடு செய்ய வேண்டும் அல்லது அங்குள்ள வணிகத்தில் பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டும் என விதிகள் கடுமையாக உள்ளன.

இந்த தகவலை ஐக்கிய அரபு எமிரேட்சின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஆணையம் (ஐசிபி) மறுத்துள்ளது. இது குறித்த ஊடக தகவலை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிராகரித்துள்ளது. மேலும், இதற்காக எந்த தனியார் நிறுவனமும் தேர்வு செய்யப்படவில்லை எனவும், கோல்டன் விசாவுக்கான விதிமுறைகள், நிபந்தனைகள் அமைச்சக முடிவுகளின்படி தெளிவாக வரையறுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி உள்ளது. இதைத் தொடர்ந்து ராயத் குழுமம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.