6 மாத குழந்தைக்கு ஹெகுரு பயிற்சி… தவறான தகவலை பரப்பிய ரோபோ சங்கர் மகள் இந்திரஜா… தமிழ்நாடு அரசு சரிபார்ப்பு அமைப்பகம் வெளியிட்ட அதிரடி அறிக்கை…!!
SeithiSolai Tamil July 11, 2025 05:48 AM

நடிகர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா. இவர் பிகில், விருமன் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இவருக்கு திருமணம் நடைபெற்று தற்போது 6 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நடிப்பதை தவிர்த்து குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் குறித்து youtube, இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் 6 மாத குழந்தைக்கு ஹெகுரு பயிற்சி முறை அளித்ததாகவும், அது குழந்தையின் அறிவுத்திறனை வளர்க்க உதவுவதாகவும் ப்ரோமோஷன் வீடியோ ஒன்று பதிவிட்டிருந்தார்.

இது குறித்த வீடியோவிற்கு சமூக வலைதள பயனர்கள் பலரும், 6 மாத குழந்தைக்கு இதெல்லாம் தேவையா என விமர்சித்து வந்தனர். அதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்திராஜாவும், அவருடைய கணவர் கார்த்திக்கும் சேர்ந்து youtube சேனலில் இந்திய அரசு குழந்தை வளர்ப்பு குறித்து பல்வேறு விஷயங்களை கூறியுள்ளனர்.

தற்போது அந்த தகவல்கள் பெரும்பாலானவை தவறானது என்றும் அதனைப் பின்பற்றக் கூடாது என தமிழ்நாடு அரசின் சரிபார்ப்பு அமைப்பகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், முதலில் ஹெகுரூ என்ற கல்வி முறை இந்திய அரசு நவ்சேத்னா என்ற வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் தான் இந்த பயிற்சி மையம் செயல்படுவதாகவும் கூறியுள்ளனர்.

அது முற்றிலும் தவறான தகவல் என்றும், குழந்தைகள் மேம்பாட்டு துறை வெளியிட்ட நவ்சேனா வழிகாட்டும் நெறிமுறையில் ஹெகுரு குறித்தோ, ரைட் பிரைன் ஆக்டிவேஷன் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை என கூறப்பட்டுள்ளது. அதன்பின்னர், தமிழ்நாட்டில் குழந்தைகளின் சிந்தனை திறன் குறைந்துள்ளதாகவும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சிந்தனை திறன் தற்போது குறைந்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

அதற்கு விளக்கம் அளித்த சரி பார்ப்பகம், தமிழ்நாட்டில் குழந்தைகளின் சிந்தனை திறனும், மூளை வளர்ச்சியோ குறைந்ததற்கான எந்த ஒரு தரவுகளும் இல்லை. இது போன்ற தகவல்களை நவ்சேத்னாவிலும் கொடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. இதனை அடுத்து ஒன்றிய அரசு இந்த ரைட் பிரைன் ஆக்டிவேஷன் பயிற்சி முறையை செயல்படுத்த தனியாக பட்ஜெட் ஒதுக்கி உள்ளதாக கூறியுள்ளனர்.

ஆனால் அரசாங்கம் குழந்தைகள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற ஹெகுரு பயிற்சிகளை ஊக்குவிக்க, நடைமுறைப்படுத்தவோ அரசு எந்த ஒரு பட்ஜெட் தொகையும் ஒதுக்கவில்லை என சரி பார்ப்பகம் தெரிவித்துள்ளது. பின்னர் குழந்தை பிறந்தவுடன் அங்கன்வாடியில் சேர்ப்பதற்கான அரசு திட்டம் உள்ளது எனக் கூறியுள்ளனர்.

இது முற்றிலும் திரிக்கப்பட்ட தகவல் எனவும், நவ்சேத்னா குழந்தைகளை 3 வயது வரை வீட்டிலேயே வளர்க்க வேண்டும் அவ்வாறு பராமரிக்க இயலாத நிலையில் உள்ள பெற்றோர்கள் அங்கன்வாடியில் சேர்க்கலாம் என பரிந்துரைத்துள்ளது. ஆனால் அதிலும் ஹெகுரு கல்வி முறை இல்லை. ஹெகுரு என்பது ஒரு ஆக்டிவிட்டி அவர்கள் கூறுவது முற்றிலும் தவறான தகவல் என தெரிவித்துள்ளது.

மேலும் நடிகை இந்திராஜா பிரமோஷன் செய்த ஹெகுரு பயிற்சி மையம் “ஜப்பானிஸ் செர்டிபைட் எஜுகேஷன்” என்றுதான் தெரிவித்துள்ளனர். அவர்களது இணையதள பக்கத்திலும் இது ரைட் பிரைன் எஜுகேஷன் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இது போன்ற தவறான தகவல்களை பொதுமக்களுக்கு பரப்பாதீர்கள் என வலியுறுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.